தேவையான பொருட்கள்

1 கப் சோயா சங்க்

2 மேஜைக்கரண்டி சோள மாவு

2 மேஜைக்கரண்டி கடலை மாவு

1 மேஜைக்கரண்டி அரிசி மாவு

3 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

½ எலுமிச்சம் பழம்

¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

1 சிட்டிகை பெருங்காய தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

 
இஞ்சி பூண்டை பேஸ்ட் தயார் செய்துவைத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்
 
மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீரில் சோயா சங்க்ஸ்சை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
 
30 நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை எடுத்து அதை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக எடுத்த பின் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
 
பின்பு சோயா சங்ஸ் உடன் நாம் தயாரித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விட வேண்டும். 
 
இதில் சோள மாவு, கடலை மாவு, மற்றும் அரிசி மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சோயா சங்குகள் நன்கு மாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விடவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெயை சூடாக்க வேண்டும்.
 
எண்ணெய் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள சோயா சங்குகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
 
இதை கரண்டியால் எடுத்து எண்ணெயை வடித்து விட்டு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 
 
இவ்வாறு மீதமுள்ள சோயா சங்குகளையும் பக்குவமாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
 
பின்பு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சூடாக இருக்கும் போதே அதில் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து அதை சோயா சங்க் 65 உடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
இதை இப்படியே பரிமாறலாம். மொறு மொறு சுவையில் இருக்கும். 
 
மேலும் படிக்க