தேவையான பொருட்கள் 


கோதுமை மாவு- 1 கப், உளுந்து – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், ,கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது),  கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது), கேரட் – 1 (பொடியாக துருவியது), 1 கொத்து கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது.


செய்முறை


1 கப் அளவு (300 கிராம்) கோதுமை மாவை எடுத்து வாசம் வரும் வரை வறுத்தி ஒரு தட்டுக்கு மாற்றி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 


பின் அதே இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், உளுந்து ,கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, இஞ்சி துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, கேரட், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை 5 நிமிடங்களுக்கு ஆற வைத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர், வறுத்து வைத்துள்ள கோதுமை மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். ( மாவை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்)


பின் மாவில் தேவையான அளவு உப்பு, 1/4 கப் அளவு அதிகமாக புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கலக்கி  கொள்ள வேண்டும்.


இறுதியாக இந்த மாவில் 1/4 ஸ்பூன் அளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ( சமையல் சோடாவஒ ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து பின்னர் மாவில் சேர்த்து கலக்க வேண்டும். இல்லையென்றால் இட்லி ஆங்காங்கே குழி, குழியாக இருக்கும்)


ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தாளிப்பு கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் இட்லி மாவு தயார். 


இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி வழக்கமாக இட்லி சுடுவது போன்று மாவை ஊற்றி வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 


 அவ்வளவுதான் சாஃப்டான கோதுமை இட்லி தயாராகி விட்டது. இதை கார சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி,  போன்ற உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்.  


மேலும் படிக்க ‘


மட்டன் குருமாவை மிஞ்சும் சுவையில் பலாக்காய் - உருளைக்கிழங்கு குருமா... செய்முறை இதோ....


Soya Chunks Gravy: சப்பாத்தி, சாதத்திற்கு ஏற்ற காம்போ! சோயா சங்க்ஸ் கிரேவி செய்வது எப்படி?


Thakkali Kadaiyal:இட்லி, தோசைக்கு சூப்பர் காம்போ...சுவையான தக்காளி கடையல் செய்முறை...