தேவையான பொருட்கள்
300 கிராம் தாமரை தண்டு
3 தேக்கரண்டி தேன்
1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
குடை மிளகாய் 1 சிறியது
வெங்காயம் 1
10 கிராம் இஞ்சி
1/2 தேக்கரண்டி எள் விதைகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை
தாமரை தண்டுகளை கழுவி, தோலுரித்து, அதை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். ( கடைகளில் வாங்கும் போதே தோலுரித்து வாங்கினால் அதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்)
தண்டுகள் மென்மையாக இருக்க வேண்டுமென்றால், அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு தண்டுகளை ஆற வைக்க வேண்டும்.
இஞ்சி மற்றும் வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரை கப் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் தாமரை தண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மேலும் மொறுமொறுப்பு வேண்டும் என்றால் சிறிதளவு தண்ணீரில் சிறிது சோளமாவை கலந்து தாமரை தண்டுகளை அதில் போட்டு எடுத்து எண்ணெயில் பொரிக்கலாம்.
முடிந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெயில் நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தை சேர்த்து 15 வினாடிகள் வதக்க வேண்டும். நறுக்கிய குடை மிளகாய், வெள்ளை மிளகுத்தூள், கெச்சப் சேர்த்து வதக்கவும். அதில் 2-3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து தீயை குறைத்து அதில் தேன் சேர்க்க வேண்டும், உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின் வறுத்த தாமரை தண்டுகளை இதில் சேர்த்து கலக்க வேண்டும்.
இதன் மீது, எள், கொத்தமல்லி தூவி பரிமாறலாம். இந்த ஸ்நாக் மிகவும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க