தேவையான பொட்கள் 


பீர்க்கங்காய் - 150 கிராம், புளி - சிறிது , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,

  உப்பு - தேவையான அளவு  ,       


அரைக்க 


தேங்காய் துருவல் - 25 கிராம், பச்சை மிளகாய் - 1, சின்ன வெங்காயம் - 10,  சீரகம் - 1 தேக்கரண்டி, 


தாளிக்க 


எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 


கடுகு - 1/2 தேக்கரண்டி 


உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி நறுக்கி 


சின்ன வெங்காயம் - 4


கறிவேப்பிலை - சிறிது 


செய்முறை 


பீர்க்கங்காயின் தோலை நீக்கி விட்டு,  சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 


புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.


தேங்காய் துருவல், பச்சை மிளகாய்,  சின்ன வெங்காயம், சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து, கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். 


வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். பீர்க்கங்காயில் நீர்ச்சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். 


பீர்க்கங்காய் வெந்ததும், புளித் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை இதில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 


பீர்க்கங்காய் நன்மைகள் 


பீர்கங்காய் அதிகளவு நார்ச்சத்துக்களை கொண்டுள்ளதால் அது நமது செரிமானத்தை பராமரிக்க உதவும் என கூறப்படுகிறது. பீர்க்கங்காயில் மிக குறைவான அளவு கொழுப்பு உள்ளதால்,  மலச்சிக்கலைத் தடுத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.


பீர்க்கங்காயில் தோல், தலைமுடி, கண் பார்வை போன்றவற்றிற்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சியும் பீர்க்கங்காயில் அதிகமாக உள்ளது. 


மேலும் படிக்க 


Paneer Peas: நாண், சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!


Cashew Chutney: முந்திரி சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை தெரிஞ்சுகோங்க மக்களே..


Sugar Cane Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான கரும்பு பாயாசம் செய்முறை இதோ