Corn Moringa Pulao:  முருங்கை கீரை சாப்பிட அவ்வளவாக பிடிக்காது என்பவர்கள் ஸ்வீட்கார்ன் முங்கை கீரை சேர்த்து புலாவ் செய்து பார்க்கலாம். முருங்கை கீரை ஒரு சூப்பர்ஃபுட் என்பது நாம் அறிந்ததே. வாரத்தில் இரண்டு நாள் முங்கை கீரை சாப்பிடலாம்.


முருங்கை கீரை ஸ்வீட்கார்ன் புலாவ்


என்னென்ன தேவை?


அரிசி - ஒரு கப் 


வெங்காயம் - 2


ஸ்வீட்கார்ன் - ஒரு கப்


முருங்கை கீரை - ஒரு கப்


தேங்காய் பால் - ஒரு கப்


பச்சை மிளகாய் - 2


உப்பு - தேவையான அளவு


சீரகம் - ஒரு ஸ்பூன்


கொத்தமல்லி - கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு


எண்ணெய் - தேவையான அளவு 


இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்


பிரியாணி இலை, பட்டை, கிராம்பு - 1 


செய்முறை


குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். இதோடு, ஸ்வீட்கார்ன், ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்ர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின், அரிசி, தேங்காய் பால், அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். ஸ்வீட்கார்ன் முருங்கை கீரை புலாவ் ரெடி. இதை செய்ய இன்னொரு முறையும் இருக்கிறது. தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்து விடலாம். 


முருங்கைக் கீரை துவையல்


என்னென்ன தேவை?


முருங்கைக் கீரை இலைகள் - 2 கப்


உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்


பூண்டு - 4


நறுக்கிய வெங்காயம் - 1


பச்சை மிளகாய் - 2


புளி - சிறதளவு


கருவேப்பிலை - சிறிதளவு


துருவிய தேங்காய் - ஒரு கப்


கொத்தமல்லி இழை - சிறிதளவு


உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:


கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் உளுந்து, மிளகாய், புளி, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை முருங்கைக் கீரை உள்ளிட்டவற்றை நன்றாக வதக்கவும். முருங்கைக் கீரை கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். நைஸாக அரைக்க வேண்டாம். இதை சாதம் அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். இதே முறையில் முருங்கை பூவையும் சேர்த்து துவையல் அரைக்கலாம். இதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கும்.


முருங்கைக் கீரை அடிக்கடி கிடைக்கவில்லை என்றாலும் செய்வது சுலபமாக இல்லை என்றாலோ, இட்லி பொடி அரைக்கும்போது முருங்கைக் கீரை சேர்த்து கொள்ளலாம். தனியாக முருங்கைக் கீரை பொடியாக செய்து வைக்கலாம். சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவற்றிற்கு சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முருங்கைக் கீரை பொடி சாதம் செய்யும்போது அதில் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து செய்யலாம் ஆரோக்கியமும் கூடும். சுவையாகவும் இருக்கும்.



  • இட்லி பொடி அரைக்கும்போது அதில் முருங்கை கீரை சேர்க்கலாம். 

  • முருங்கை கீரையை சூப் ஆகவும் செய்து குடிக்கலாம்.

  • வாரத்தில் இரண்டு முறை உணவில் முருங்கை கீரை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

  • இன்னும் எளிதாக செய்ய வேண்டுமென்றால் முருங்கை கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து கொஞ்சம் மிளகு, உப்பு சேர்த்து அந்த சாறை குடிக்கலாம்.