இட்லி, தோசைக்கு சூப்பர் காம்போ! பீர்க்கங்காய் சட்னி செய்முறை இதோ!

சுவையான பீர்க்கங்காய் சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

இட்லி, தோசைக்கு வழக்கமான தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னியை வைத்து சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்போ நீங்க இந்த பீர்க்கங்காய் சட்னியை ட்ரை பண்னி பார்க்கலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதை  குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான சட்னியாக இருக்கும். வாங்க இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

Continues below advertisement

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் - 1

வெங்காயம் - 1 

புளி - லெமன் சைஸ்

காய்ந்த மிளகாய் - 6

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு 

கடுகு - 1/4 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, சூடானதும், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் கடாயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி பின் புளி மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

இதனுடன் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி விட்டு, இந்த கலவையை ஆற வைக்க வேண்டும்.

பின்னர் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான சட்னி தயார்.

கடுகு கறிவேப்பிலை தாளித்து இதில் இதை சேர்த்து பறிமாறலாம். 

மேலும் படிக்க 

Chief Minister M.K.Stalin: வெள்ள பாதிப்பு: ரூ. 1,000 கோடி நிவாரணத்தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Vijayakanth: ”பெண் பார்க்க சன்னியாசி போல வந்த விஜயகாந்த்” - பிரேமலதா பகிர்ந்த கேப்டனின் அறியாத மறுபக்கம்

TN Rain Alert: குமரிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Continues below advertisement