சிக்கனில், கிரேவி, 65, வறுவல் உள்ளிட்ட பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இப்போது நாம் கோங்குரா சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


சிக்கன் - 1/2 கிலோ , வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) , பச்சை மிளகாய் - 4 (கீறியது)  இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது), பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது), மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா - 1 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப


வறுத்து அரைப்பதற்கு


வெந்தயம் - 1/4 டீஸ்பூன், மல்லி - 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4 , சோம்பு - 1 டீஸ்பூன்,


கோங்குரா மசாலாவிற்கு


நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், பூண்டு - 4 பல் , கோங்குரா கீரை/புளிச்சக்கீரை - 2 கப் (நறுக்கியது) ,உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை


முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 


பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில்  வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.


இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு , 1/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் கோங்குரா கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் அரைத்த பொடியை சேர்த்து, கீரை மென்மையாகும் வரை வதக்க வேண்டும். 


கீரை வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் ரெடி.

மேலும் படிக்க 


Vijayakanth LIVE Update: சொர்க்கத்தில் சொக்கத் தங்கம்; வேதனையில் திரையுலகம் - தவிக்கும் தமிழக மக்கள்!


Vijayakanth Death: “என்னுடைய நெருங்கிய நண்பர் விஜயகாந்த்.. அவர் இடத்தை நிரப்புவது கடினம்” - பிரதமர் மோடி இரங்கல்


Vijayakanth Demise: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..