CM Stalin Speech: அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை நினைத்து இன்றுவரை புலம்பி வருகின்றனர் என திமுக இளைஞரணி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Continues below advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்று வருகிறார். அப்போது பேசிய அவர், ”திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு வயது 70 ஆனாலும், தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன். 

Continues below advertisement

உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை நினைத்து இன்றுவரை புலம்பி வருகின்றனர். எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தை நாமும் எடுக்க வேண்டும்.  திசை திருப்புவோரின் சதிகளில் நாம் சிக்க வேண்டாம். தவறான தகவல்களை பரப்பி பொய் பரப்புரை செய்வோரின் சதிகளில் நாம் சிக்க வேண்டாம். பதவிகளுக்காக இல்லாமல் கொள்கைகளுக்காக நாம் உழைக்க வேண்டும். இது திராவிட மாடல் ஆட்சி. கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கை அளித்துள்ளது திராவிட மாடல் ஆட்சி. கடுமையாக உழைத்ததால் முதலமைச்சராக முன்னேறியுள்ளேன். 

இந்தியா என்று பெயரை கேட்டாலே சிலர் பயப்படுகின்றனர். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி.

அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; அது பாவ யாத்திரை” என்று பேசியுள்ளார். 
 

Continues below advertisement