இந்த பிரெஞ்ச் டோஸ்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்த நேரத்தில் ஒரு ரெசிபியை தயார் செய்து கொடுக்க நினைத்தால் இந்த ரெசிபியை தேர்வு செய்யலாம். முட்டை, பால், வெண்ணெய் , மிளகுத்தூள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செய்யப்படுவதால் இந்த ரெசிபி ஒரு நிறைவான உணவாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை குறைவான நேரத்தில் செய்து விட முடியும். வாங்க சீஸ் பிரெஞ்ச் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 





தேவையான பொருட்கள்


முட்டை – 2





பால் – அரை கப் காய்ச்சி ஆற வைத்தது








உப்பு – தேவையான அளவு








மிளகு தூள் – 1/4 ஸ்பூன்








வெண்ணெய் – தேவையான அளவு








பிரட் துண்டுகள் ( தேவையான எண்ணிக்கையில்) 








சீஸ் துண்டுகள்


செய்முறை





ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். முட்டை கலவையை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.








தோசைக் கல்லை சூடாக்கி, வெண்ணெய் தடவி, வெண்ணெய் உருகியதும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து தோசைக்கல்லில் போட்டு வேக வைக்க வேண்டும். 








தோசைக்கல்லில் உள்ள பிரெட் துண்டின் மீது ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து, அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்க வேண்டும்.





பிரெட்டின் அடிப்பகுதி வெந்த உடன் மறுபுறம் திருப்பி, போட்டு பிரட்டின் ஓரங்களில் வெண்ணெய் தடவி வேக வைக்க வேண்டும்.








வெந்த பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல், மற்றொரு பிரெட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்க வேண்டும்.








ஓரங்களில் வெண்ணெய் தடவி, மறுபுறம் திருப்பி விட வேண்டும். தோசைக்கல்லை மூடி வைத்து குறைந்த தீயில் 2-ல் இருந்து 3 நிமிடங்கள் வேகவிடவேண்டும்..








மீண்டும் பிரெட் துண்டை  மறுபுறம் திருப்பி மூடி வைத்து 1 நிமிடம் வேகவிடவேண்டும். அவ்வளவுதான் சீஸ் பிரஞ்ச் டோஸ்ட் தயார். இதை இரண்டாக வெட்டி சூடாக பரிமாறலாம்.


மேலும் படிக்க


Kanda Sashti Viratham: முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்... சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்!


Crime: காசு பணம் துட்டு மணி..! குப்பைத் தொட்டியில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணம்...பெங்களூருவில் பகீர்!