உப்மா, கிச்சடி என்றாலே நம்மில் பெரும்பாலானோர் சலித்துக் கொள்வோம். அதற்கு காரணம் அவற்றின் சுவைதான்.  மசூர் பருப்பு கிச்சடியை ஒருமுறை சுவைத்தால் போதும் நிச்சயம் இந்த ரெசிபி உங்களுக்குப் பிடித்து விடும். கிச்சடியை பிடிக்காதவர்கள் கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க சுவையான மசூர் பருப்பு கிச்சடி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 



  • 1 கப் மசூர் பருப்பு

  • 1 கப் அரிசி

  • 4 கப் தண்ணீர்

  • 1 வெங்காயம், பொடியாக நறுக்கியது

  • 1 தக்காளி, பொடியாக நறுக்கியது

  • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது

  • 1 தேக்கரண்டி சீரகம்

  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 

  • 1 தேக்கரண்டி கரம் மசாலா

  • சுவைக்கேற்ப உப்பு

  • 2 டீஸ்பூன் நெய்

  • ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள் (அலங்கரிப்பதற்காக)


செய்முறை


1. முதலில், மசூர் பருப்பு மற்றும் அரிசியை தனித்தனியாக தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவற்றை சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 

2.இப்போது பிரஷர் குக்கரில் சிறிது நெய்யை சூடாக்கி, சீரகம் சேர்த்து அவற்றை பொரிய விட வேண்டும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். 

 

3.அடுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாக மாறும் வரை வதக்க வேண்டும்.

 

4.ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியிலிருந்து தண்ணீரை வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.

 

5.மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது, ​​4 கப் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கிளறி விட வேண்டும்.
 


6. குக்கர் மூடியை மூடி, இரண்டு விசில்கள் வரும் வரை அதிக தீயில் வேக வைக்கவும், பின்னர் தீயை குறைத்து மேலும் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

 

7.ஆறியதும் நன்கு கிளறி கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும். இப்போது மசூர் பருப்பு கிச்சடி தயாராகி விட்டது. இதை சூடாக பறிமாறலாம்.  





மேலும் படிக்க


CM Stalin Speech: அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு


ODI Ranking: பேட்டிங், பவுலிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் முதலிடம்! பின்னுக்குத் தள்ளப்பட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்கள்!


ENG Vs NED Innings Highlights: ஸ்டோக்ஸ் சதமடித்து மிரட்டல்.. மலான், வோக்ஸ் அரைசதம்.. நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்கு..!