உலகக் கோப்பை 2023ல் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 


அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக பேர்ஸ்டோவ் மற்றும் மலான் களமிறங்கினர். மிகவும் பழக்கப்பட்ட புனே மைதானத்தில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோவ் வெறும் 15 ரன்கள் வெளியேற, மறுமுனையில் களமிறங்கிய மலான் கிடைத்த பந்துகளில் பவுண்டரிகளை விரட்டி கொண்டிருந்தார். 


தொடர்ந்து, உள்ளே வந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஓரளவு நிலைத்து நின்று ரன் உயர்த்தி கொண்டிருந்தபோது, வித்தியாசமான முறையில் ரன் அடிக்க முயன்று க்ளீன் போல்டானார். இந்தநிலையில்,  மறுமுனையில் அரைசதம் கடந்து உலகக் கோப்பை 2023யில் தனது இரண்டாவது சதத்தை நோக்கி நகர்ந்தார் மலான். 


அந்தநேரத்தில் பேட்டிங் வந்த ஸ்டோக்ஸின் சிறு தவறால், 87 ரன்களில் ரன் அவுட்டாகி மலான் ஏமாற்றத்துடன் நடையைக்கட்டினார். பின் வரிசை வீரரான ஹாரி ப்ரூக் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டி ஓரளவு நம்பிக்கை அளிக்க, தூக்கிஅடிக்க முயற்சித்து டி லீட் வீசிய 27வது ஓவரில் அக்கர்மேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இப்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.


தொடர்ந்து இங்கிலாந்து அணி 33 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் இணைந்து 17 பந்துகளில் 8 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயீன் அலி, 15 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆர்யன் வீசிய 36வது ஓவரில் அவுட்டானார்.


7வது விக்கெட் உள்ளே வந்த கிறிஸ் வோக்ஸ் 34 பந்திகளில் 32 ரன்கள் குவிக்க, நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ் 66 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆடி வந்தார். அப்போது இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. அதே ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு கெத்து காட்ட, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 


ஸ்டோக்ஸ் தொடர்ந்து அதிரடி காட்டி அசத்த, அவ்வபோது வோக்ஸும் பவுண்டரிகளை விரட்டி கொண்டு இருந்தார். இதன்மூலம், 47வது ஓவரில் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து, வான் மக்ரீன் பந்தில் ஒரு பவுண்டரியை விரட்டி, பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 


டி லீட் வீசிய 49வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரியை பறக்கவிட்டு வோக்ஸ் அரைசதத்தை கடந்த நிலையில், 3வது பந்தில் நெதர்லாந்து கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எட்வர்ஸிடம் கேட்சானார். அடுத்ததாக உள்ளே வந்த வில்லி தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்து அவுட்டாக, 


கடைசி ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸருடன் 84 பந்துகளில் 108 ரன்கள் அடித்து வான் பீக் பந்தில் கேட்சானார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்தது. 


நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டி லீட் 3 விக்கெட்களும், ஆர்யன் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.