மாலை நேரத்தில் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட எல்லோரும் விரும்புவோம். வடை, போண்டா, ஸ்நாக்ஸ் போன்றவற்றை நீங்கள் வழக்கமாக சுவைத்திருப்பீர்கள். புதியதாக ஒரு ஸ்நாக் ரெசிபியை நீங்கள் சாப்பிட விரும்பினால், மதுரை பால் பன் ரெசிபியை முயற்சிக்கலாம். இந்த ரெசிபியை மிகவும் எளிமையாக குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். பால் மற்றும் கோதுமை உள்ளிட்டவை சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை அலாதியானதாக இருக்கும். இந்த பால் பன், வெளிப்புறத்தில் மொறு மொறுவென்றும் உட்புறத்தில் சாஃப்ட்டாகவும் இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்




1 கப்கோதுமை மாவு

1/2 கப் தயிர்

2 டீஸ்பூன் சர்க்கரை

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா

1 ஏலக்காய்

1 டேபிள் ஸ்பூன் நெய்

பொரிப்பதற்கான எண்ணெய்

சர்க்கரை சிரப்புக்கு:

1/2 கப் சர்க்கரை

1/2 கப் தண்ணீர்

1ஏலக்காய்

செய்முறை


மிக்ஸி ஜாரில் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.



ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் சோடா, நெய் சேர்த்து கலக்க வேண்டும்.



இதனுடன் தயிரை சிறிது, சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து  மூடி போட்டு 1/2 மணிநேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.



ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும்.




கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், கலந்து வைத்த மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

 

இந்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்க வேண்டும்.

 

மேலும் படிக்க