தேவையான பொருட்கள் 


ரவை -1 கப்


பால் – 1 1/2 கப்







இனிப்பில்லாத கோகோ பவுடர் – கால் கப்








பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்








துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன்








வைப்டு க்ரீம் – தேவையான அளவு








அரைத்து பொடித்த சர்க்கரை – அரை கப்








உப்பில்லாத வெண்ணெய் – கால் கப்








வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்








பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்







உப்பு – ஒரு சிட்டிகை


செய்முறை 





ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் ரவையை சேர்த்து அரைத்து, ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.








மற்றொரு பாத்திரத்தில் பால், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் அனைத்தும் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். இவை கொதிக்கும் முன் இறக்கி விட வேண்டும்.








இப்போது உருகிய இந்த கலவையை மாவில் சேர்த்து கலந்து விட வேண்டும் . தயார் செய்த கேக் மாவை மூடி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.








மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் 15 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும். கேக் டின்னில் வெண்ணெய் தடவி,பெண்கள் மட்டும் சுமந்து சென்று வழிபட்ட நடராஜர்.. தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத நிகழ்வு.. எங்கு தெரியுமா? சிறிது காய்ந்த மாவை சேர்த்து தட்டிவிடவேண்டும்.








பின்னர் கேக் மாவில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அதிகமாக கலந்துவிடக்கூடாது.





கேக் டின்னில் மாவை சேர்த்து 180 டிகிரி செல்சியஸில் அரை மணிநேரம் வரை பேக் செய்ய வேண்டும். அல்லது அவ்வப்போது பல்குச்சியைப் பயன்படுத்தி சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.








டெசிகேடட் கோக்கனட்டை ஒரு கடாயில் குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்க்க வேண்டும்.








பேக் செய்த கேக்கில் சிறிது வைப்ட் க்ரீமை பரப்ப வேண்டும். தேங்காய் வைத்து அலங்கரிக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான கேக் தயாராகி விட்டது.