தேவையான பொருட்கள்


சாமை அரிசி – 1 டம்ளர்
இட்லி அரிசி – 1 டம்ளர் 
உளுத்தம் பருப்பு – 1/4 டம்ளர்
வர மிளகாய் – 7 
சின்ன வெங்காயம் – 10
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை


முதலில் இட்லி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின் உளுந்தையும் கழுவி அதையும் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் சாமை அரிசியை கழுவி சுத்தம் செய்து அதையும் அலசி  தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும். 


பின்னர் பூசணிக்காயின் தோல் நீக்கி விட்டு, துருவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் தனியாக வைத்துகொள்ள வேண்டும். 


அடுப்பில் கடாய் வைத்து,சிறிது எண்ணெய் சேர்த்து, சூடானதும், வர மிளகாய், துருவிய பூசணிக்காய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 


அவை நன்றாக வதங்கிய பின் ஊற வைத்த அரிசி, உளுந்து ஆகியவற்றை தண்ணீர் வடித்து விட்டு, ஒரு மிக்சி ஜாரில் அல்லது கிரைண்டரில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.  கிட்டத்தட்ட 7 முதல் 8 மணிநேரம் வரை இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். 


இந்த மாவை தோசைக்கல்லில் நாம் வழக்கமாக தோசை சுடுவது போன்று சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான சாமை -பூசணிக்காய் தோசை தயார். இதை கார சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லாது சாம்பாருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 


சாமை பயன்கள் 


சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவலாம். சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. மலச்சிக்கலை போக்க வல்லது. நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.  இது மட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்புச் சத்து  எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலனளிக்க உதவும். எலும்புகளுக்கு ஊட்டமளிக்க சாமை உதவும்.


மேலும் படிக்க 


Adani Hindenburg Case: அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம்: SEBI அமைப்பே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த முக்கிய தகவல்!


Assam Accident: அதிகாலையில் கோர சம்பவம் - பேருந்தும் லாரியும் மோதி விபத்து, அசாமில் 14 பேர் பலி