“பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன். அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேலோ இந்தியா நடத்துவதற்கான பொறுப்பு முதன்முதலாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 19ம் தேதி தொடஙி ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக நாளை பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறேன்.
பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொலை வழங்குவது பற்றிய முடிவை முதலமைச்சர் எடுப்பார். நான் முக்கியமாக கேலோ இந்தியா நிகழ்வுக்காக அழைப்பிதழை கொடுப்பதற்காகவே பிரதமர் மோடியை நாளை டெல்லியில் சந்திக்க இருக்கிறேன். அப்போது அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைப்பேன்” என தெரிவித்தார்.