பொதுவாகவே பால் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை ஏராளமானோர் விரும்பி சாப்பிடுவர். பாலை கொண்டு, பால்கோவா, திரட்டுப் பால், பால் பாயாசம், ஜிகிர் தண்டா உள்ளிட்ட பல்வேறு இனிப்புகளை செய்யலாம். இப்போது நாம் வெறும் 4 பொருட்களை வைத்து எப்படி சுவையான பால் கேக் தயாரிப்பது என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். இந்த ரெசிபியை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விட முடியும். 


தேவையான பொருட்கள் 


பால் - ஒன்றரை லிட்டர்


சர்க்கரை - 150 கிராம்


வினிகர் - 1 ஸ்பூன்


ஏலக்காய்த்தூள்- கால் ஸ்பூன்


செய்முறை


ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவு பால் சேர்த்து, இது ஒரு லிட்டராக மாறும் வரை காய்ச்ச வேண்டும். இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வினிகர் சேர்க்கவும். இப்போது பால் திரிந்துவ் வரும். பால் திரிந்து வரவில்லை என்றால் மேலும் சிறிது வினிகர் சேர்க்கலாம். இப்போது இதை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பால் திரிந்த உடன் தண்ணீர் தனியாக பிரிந்து நிற்கும். இப்போது இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து இந்த தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.


அடிபிடிக்காமல் இருக்க தீயை குறைத்து வைத்துக் கொள்ளலாம். இப்போது சிறிது ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். தண்ணீர் சுத்தமாக வற்றியதும், இதை ஒரு ட்ரேவுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது இதை சமப்படுத்தி விட வேண்டும். இதை இரண்டு மணி நேரம் ஆற விட்டு, இப்போது இதை உங்களுக்கு தேவையான வடிவங்களில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான பால் கேக் தயார். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க 


House Hold Tips: வாழைப்பழம் இப்படி வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் - கதவு, ஜன்னல்கள் பளீச்சென மாற டிப்ஸ்!


Weight loss Journey: இளநீர் உடல் எடையை குறைக்க உதவுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?