நம் வீட்டில் உள்ள கதவு ஜன்னல்கள் தூசி படிந்து களையிழந்து காட்சி அளிக்கும். இதை சுத்தம் செய்ய நீங்கள் விலை உயர்ந்த லிக்விட்களை வாங்க வேண்டாம். ஒரு எளிமையான முறையை பயன்படுத்தி சிறிது நேரத்திலேயே உங்கள் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை நீங்கள் பள பளவென புதியது போன்று மாற்றி விட முடியும். 


கதவு, ஜன்னலை சுத்தம் செய்ய:


ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் ஏதேனும் ஒரு ஷாம்பூவை அரை ஸ்பூன் அளவு கலந்து கொள்ள வேண்டும். இதை நன்றாக கலக்கி விட்டுக்கொள்ள வேண்டும். இப்போது உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவில் படிந்திருக்கும் தூசியை ஒரு பிரஷ் வைத்து துடைக்க வேண்டும். 


பின் ஒரு சாஃப்டான துணியை எடுத்து,  நாம் தயாரித்து வைத்துள்ள லிக்விடில் நனைத்து கதவு மற்றும் ஜன்னல்களை துடைக்க வேண்டும். இப்படி செய்வதால் அவற்றில் உள்ள அழுக்கு முழுவதுமாக நீங்கி விடும். கதவு, ஜன்னல் புதியது போன்று மாறி விடும். 


கேஸ் ஸ்டவ், ஃபேன் இறக்கையை துடைக்க


உங்கள் வீட்டு கேஸ் ஸ்டவ் மற்றும்  ஃபேன் இறக்கைகளையும் இந்த லிக்விடை பயன்படுத்தி நீங்கள் சுத்தம் செய்யலாம். துணியை இந்த லிக்விடில் நனைத்து ஃபேன் இறக்கையை துடைத்தால் பளிச்சென மாறிவிடும். இதே முறையில் நம் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் ஸ்டவ்வையும் துடைக்கலாம். இப்படி துடைப்பதால் உங்கள் ஸ்டவ்வில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்க பளிச்சென மாறி விடும். 


வாழைப்பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்


நாம் வாழைப்பழம் வாங்கும் போது ஒரு சீப் வாங்கி வைப்போம். இரண்டு மூன்று நாட்களிலேயே வாழைப்பழம் நன்கு பழுத்து பின் அழுகியும் விடும். இதனால் வாழைப்பழம் வீணாகி விடும். இப்படி ஆகாமல் வாழைப்பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்க இதை பண்ணுங்க.


ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு இன்ச் உயரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். வாழைப்பழத்தின் காம்பு பகுதி மட்டும் தண்ணீரில் மூழ்கும் அளவு வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதால் வாழைப்பழம் ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். ஆனால் இப்படி வைப்பதற்கு நீங்கள் ஃப்ரெஷ்ஷான அடிபடாத வாழைப்பழத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். 


மேலும் படிக்க 


Household Tips :மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரிய.. சர்க்கரை தண்ணீர் விடாமல் இருக்க.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!


Velvet Pan Cake :வெல்வெட் பேன் கேக் இப்படி செய்து பாருங்க... சுவை சூப்பரா இருக்கும்..