16 ஆம் நூற்றாண்டில் விருதுநகர், மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாக பலகாலம் இருந்தது. அதன் பின் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான நாயக்கர்களின் நிர்வாகத்தின் கீழ் இந்தப் பகுதி இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் சந்தா சாகிப், ஆற்காடு நவாப் மற்றும் முகம்மது யூசுப்கான் ஆகியோர் ஆட்சி புரிந்தனர். 1801இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் இப்பிரதேசம் வந்தபின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. இந்நகரத்தின் பெயர் 1875 இல் விருதுப்பட்டி என மாற்றப்பட்டது, 1923 ஏப்ரல் 6 ஆம் தேதி நகர சபை இதற்கு விருதுநகர் என்று பெயர் மாற்றியது. பிரித்தானிய ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, மேலும் குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி, வைப்பார் மற்றும் தேவிபட்டினம் துறைமுகங்கள் வழியாக விருதுநகரிலிருந்து பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ஊர்களாக அருப்புக்கோட்டை, சிவகாசி,  சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் ராஜபாளையம் திகழ்கின்றன.


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 17 | சீரக சம்பா பிரியாணி திண்டுக்கல்லுக்கு வந்த கதை - வாய்க்கு போடாதீங்க பூட்டு



கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 16 | ஆம்பூர் பிரியாணியும் மக்கன் பேடாவும் - பிரியாணி சாம்ராஜ்ஜியத்திற்குள் திக் விஜயம்


கரிசல் பூமியான இந்த நிலத்தில் இருந்து கரிசல் இலக்கியங்கள் முகிழ்த்தன. கரிசல் இலக்கியங்கள் மக்களின் பாடுகளைப் பேசின, அவர்களின் உணவுகளையும் பேசின. பெரும்பாலும் வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதியின் மக்கள் கடுமையான உழைப்பாளிகள், கடுமையான மன உறுதி கொண்டவர்கள். இந்தப் பகுதியில் உளுந்து, மல்லி, துவரம்பருப்பு, கிழங்கு வகைகள், சிறுதானியங்கள் தான் அதிகப்படியாக விளையும். கம்மங்கூழ் என்பது உழைக்கும் மக்களின் அன்றாட உணவு. இந்தக் கம்மங்கூழுக்கு துவரம் பருப்பை அரைத்துத் துவையல் வைப்பார்கள் பாருங்கள் இதனை எழுதும் போதே அந்தச் சுவையின் வாசனை என் நாசியை எட்டுகிறது. உளுந்து விளையும் பூமி என்பதால் இங்கே உளுந்த வடைகள் பிரமாதமாக இருக்கும், நீங்கள் சாப்பிடும் வடைகள் அல்ல இங்கே கருப்பு உளுந்தை ஊற வைத்து அரைத்து வடை சுடுவார்கள், அப்படி ஒரு மனம் அப்படி ஒரு ருசி. கருப்பை ஒரு முறை ருசி பார்த்தால் பின்பு வெள்ளையின் மீதான மயக்கம் ஒழிந்து விடும். 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 15 | குற்றால குளியலும் பார்டர் கடை பரோட்டாவும் - பொதிகை மலைச்சாரலில் உணவு உலா



கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 14| ஸ்ரீவில்லிபுத்தூர் TO சங்கரன் கோவில் [வழி ராஜபாளையம்] - மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிழலில் உணவு உலா


கோடைக் காலத்தில் புற்றீசலைப் பிடித்து பொரியாக்கிக் குழந்தைகளுக்குத் தருவார்கள். இந்தப் பகுதியில் உளுந்தங்களியும் நல்லெண்ணையும் கமகமக்கும். உருந்தங்களியும் கோழிக்குழம்பும் வைத்து சாப்பிடும் வழக்கமும் உள்ளது, இது ஒரு அற்புதமான கூட்டணி. கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, சோளம், திணை, குதிரைவாலி, மக்காசோளம் என்று கரிசல் நிலத்தில் சிறுதானியங்கள் அற்புதமாக விளையும். கிராமங்களில் சிறுதானியங்கள் தான் 90கள் வரை பிரதான உணவாக இருந்தது. வரகுச் சோற்றை அப்படியே வெறும் வாயில் சாப்பிடலாம் குழம்பு வெஞ்சனம் எதுவும் தேவையில்லை, அவ்வளவு ருசி. காலையிலேயே இந்தப்பகுதி கிராமங்களில் உள்ள டீக் கடைகளில் அவித்து மசால் போட்ட மொச்சைப் பயறு மற்றும் கேசரி கிடைக்கும். அவசரமாக நகரத்திற்குச் செல்பவர்களுக்கு இதுவே காலைச் சிற்றுண்டி. வயல் வேலை செய்பவர்கள் கூட இந்த அவித்த மொச்சை மற்றும் ஒரு தேநீருடன் காட்டில் வேலை செய்யக் கிளம்பி விடுவார்கள். 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 13 | திருநெல்வேலி திருபாகம் முதல் கடையம் வத்தல் குழம்பு வரை - தாமிரபரணி கரையோர பயணம்




கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்


விவசாயம் போலவே இந்தப் பகுதியில் ஆடு வளர்ப்பும் மிக முக்கியத் தொழில். வானம் பார்த்த பூமியில் விளையும் புற்கள், அருகம் புல் வேர், மரப்பட்டைகள், கருவேலங்காய்கள் என இவற்றை உண்ணும் ஆடுகளின் கறி அலாதியான ருசியாக இருக்கும். இந்த நுண் சத்துக்களை உண்பதால் ஆட்டுக்கறியின் சத்து தீவிரமாக இருக்கும், மதுரை மட்டன் சுக்காவின் ரகசியம் இந்த வெள்ளாடுகள் தான். விருதுநகரின் அடையாளமாக பொறித்த பரோட்டா திகழ்கிறது. விருதுநகரில் மூன்றாம் தலைமுறையாக இயங்கும் அசன் பரோட்டா கடை தான் பொறிச்ச பரோட்டாவின் பிறப்பிடம். இந்த கடையில் பொறித்த பரோட்டாவுடன் புறாக் கறி தான் திவ்வியமான காம்பினேசன். இந்த பரோட்டாவை விருதுநகரில் குடிசை தொழில் போல் தயார் செய்து தருகிறார்கள், நீங்கள் 25-50 பரோட்டாக்களை வாங்கி உங்கள் ப்ரிட்ஜில் வைத்து வேண்டிய நேரத்தில் கல்லில் போட்டு பொறித்து எடுக்கலாம், வெளியூர்களில் வசிக்கும் வருதுநகர் காரர்கள் ஊருக்கு வந்து கிளம்பும் போது மறக்காமல் உடன் இந்த செமி குக்ட் பரோட்டாக்களை வாங்கிச் செல்வார்கள். 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 11| பதநீர் ஊற்றி செய்யப்படும் சர்க்கரை பொங்கல்.. நாவை சப்பு கொட்ட வைக்கும் நாஞ்சில் நாட்டு பயணம்




கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 10 | உணவு பிரியர்களின் சங்கமம் சேலம் - ராக்கெட் ரோஸ்ட் முதல் அணுகுண்டு சாப்ஸ் வரை...!


விருதுநகரின் மற்றும் ஒரு அடையாளம் பர்மா கடை. இந்தக் கடையில் பொறித்த பரோட்டாவுடன் நாட்டுக்கோழி மிகவும் பேமஸ். விருதுநகர் கமாலியா கார்டன் ரெஸ்டாரண்டிலும் புறாக் கறி அற்புதமாக இருக்கும். அதே போல் அல்லா பிச்சைக் கடையில் பரோட்டாவுடன் கொத்துக்கறி ஒரு பிரிக்க முடியாத கூட்டணியாகப் பல காலம் நிலைத்து நிற்கிறது. அருப்புக்கோட்டையில் பானு ஹோட்டல் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவகம். இட்லி ரத்த பொறியல், பரோட்டா, மட்டன் சுக்கா இங்கே பிரசித்தம். அருப்புக்கோட்டை திருச்சூழி சாலையில் உள்ள தனலட்சுமி ஹோட்டல் கோலா உருண்டை திருப்பதி லட்டை போலவே வாயில் கரைந்து உருகும். அருப்புக்கோட்டை சில்க் கடையில் புரோட்டா, மட்டன் சுக்கா, கொத்துக்கறி, நாட்டுக்கோழி நல்ல சுவையுடன் கிடைக்கும். அதே போல் மாமா கடையில் பரோட்டா, பீஃப் கொத்து, சுக்கா, மூளை ஆகியவைகளுடன் அவர்கள் தரும் மூன்று வகை சால்னாவை அடித்துக்கொள்ள முடியாது. திருச்சுழி சாலையில் உள்ள மைனா ஹோட்டலின் நாட்டுக் கோழி கிரேவியையும் ஒரு கை பார்த்து விட்டுச் செல்லுங்கள்.


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola pasi Series-9 | கரூர்: கொல்லி மலை தேன் முதல் நாடோடித்தென்றல் வாத்து வரை




கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola pasi Series-8 | கோயம்புத்தூர்: கொள்ளு ரசம் முதல் கமலாத்தாள் பாட்டியின் ஒரு ரூபாய் இட்லி வரை


சிவகாசியில் உள்ள நைனா பிரியாணியில் மட்டன் பிரியாணி சிறப்பாக இருக்கும். ரோலெக்ஸ் டெய்லர் கடை அருகில் இருக்கும் பர்மா அத்தோ கடையில் வெஜ் அத்தோ, முயோ வெஜ், பிளைன் எக் அத்தோ, மசாலா எக் அத்தோ, சிக்கன் அத்தோ, பேஜோ எக், வாழைத்தண்டு சூப், மேய்ங்கோ சூப் என ஒரு பெரும் பர்மா விருந்தே காத்திருக்கிறது. சிவகாசியில் ஹோட்டல் அப்பன்ஸ் மற்றும் ஹோட்டல் டீலக்ஸ் முக்கியக் கடைகள். ஹோட்டல் டீலக்சில் கிடைக்கும் மூளை பரோட்டாவை தமிழகத்தில் வேறு எங்கும் நான் கேள்விப்பட்டதில்லை. இந்தக் கடையின் மட்டன் சுக்கா, மட்டன் சாப்ஸ் மிகவும் பக்குவமாக இருக்கும். விஜயம் மெஸ்-ல் பஞ்சாபி சிக்கன், பியாங்க் சிக்கன், சூப்பர் சில்லி சிக்கன், கெட்டி சிக்கன் குருமா என பல புதிய உணவுகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. 


கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola pasi Series-7 | ஈரோடு மட்டன் கொத்துக்கறி முதல் பள்ளிப்பாளையம் சிக்கன் வரை - கொங்குநாட்டு பயணம்..!




கொலபசி உணவு தொடரை மேலும் ருசிக்க  மற்ற  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola Pasi Series-6 |மலைக்கோட்டை TO புதுக்கோட்டை வரை - மண் மணக்கும் உணவும் சமூக பொறுப்பும்...!


சாத்தூரில் கருப்பையா நாடார் ஈவினிங் மட்டன் ஸ்டால் பெயர் பெற்ற உணவகம். காமராஜருக்கு சமைத்துப் போட்ட குடும்பத்தின் உணவகம் என்பதால் இது ஒரு அந்தஸ்தான உணவகமாக கருதப்படுகிறது.  மட்டன் சுக்கா, காடை, ரத்தப் பொறியல், சுவரொட்டி, பான் பரோட்டா என இங்கேயும் பல சுவையான பண்டங்கள் கிடைக்கிறது. இதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு சாத்தூர் புகழ் கரண்டி ஆம்லேட்டை மறந்து விடாதீர்கள். இந்தப் பகுதியில் மல்லி அற்புதமாக விளையும், மல்லித் துவையலை இங்கு போல் வேறு எங்கும் ருசித்ததில்லை, கிழங்கு வகைகளும் இங்கே அற்புதமாக விளையும். தமிழகம் முழுவதும் தள்ளுவண்டிகளில் அவித்து விற்கப்படும் கிழங்குகள் இங்கிருந்து தான் செல்கிறது. கரிசல் மண்ணில் விளைந்த கருணைக்கிழங்கு போட்டு வைக்கப்படும் புளிக் குழம்பு அபார ருசியுடன் இருக்கும். கரிசல் மண்ணை ருசித்துப் பார்த்தாலே வாசனையாக இருக்கும். கர்ப்பினிப் பெண்கள் கரம்பை மண்ணைத் தெள்ளி வாயில் போட்டுக் கொள்வதையும் சிலர் மண்ணை ஒரு துணியில் கட்டி அவ்வப்போது முகர்ந்து பார்ப்பதையும்  என் பள்ளிப் பருவத்தில் பார்த்திருக்கிறேன்.  மண்ணின் ருசி  கரிசல் உணவுகளிலும் இருக்கும் தானே. 


கொலபசி தொடரின் முந்தய தொடர்களை சுவைக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்