100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன. தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு. இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் அதிக அளவில் உதவுகிறது. நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருப்பதன் மூலம் நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது. விரதத்தின் போது இந்த உணவு உட்கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணம், இதில் அதிக அளவில் ஆற்றல் ஆதாரமாக உள்ளது. இதனால் விரதத்தின் போது விரதம் இருப்பவர்கள் ஆற்றலுடன் இருக்க இது உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் உதவுகிறது, அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். 




  • இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது.

  • மக்கானாக்களில் பிளேவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது சரும ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.

  • இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீடு என் உள்ளது. ஆரோக்கியமான ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

  • தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.

  • நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.




  • இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது எழும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் ஆகும். எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டு பிரச்சினை போன்ற நிலைமைகளை சரிசெய்ய உங்கள் உணவில் நீங்கள் இந்த மக்கானாக்களை சேர்த்துக்கொள்ளலாம்.

  • இவை மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. அமைதியின்மை மற்றும் பதற்றத்துடன்கூடிய மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பாரம்பர்ய சிகிச்சைகளில் தாமரை விதை பயன்படுத்தப் படுகிறது.

  • இவற்றில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளன. மேலும், சேதமடைந்த புரதங்களுக்கு இந்த என்சைம்களை அளித்து உதவவும் செய்கின்றன. இதன் காரணமாக, பல அழகு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களைச் சேர்க்கின்றன.

  • இந்த உணவை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இந்த உணவை காலையில் அல்லது மதியம் என ஏதேனும் ஒரு வேளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.