தேவையான பொருட்கள்
- 1.5 கிலோ இறால்
- 5 டீஸ்பூன் கடலைமாவு (வறுத்தது)
- 3 டீஸ்பூன் சோளமாவு
- 1.5 கப் மைதா
- 2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 தேக்கரண்டி மஞ்சள்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 தேக்கரண்டி பெருங்காயம்
- 1 தேக்கரண்டி மாங்காய் தூள்
- 1 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
- உப்பு, சுவைக்க
- எண்ணெய், பொரிப்பதற்கு
- தண்ணீர், தேவைக்கேற்ப
செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, சோள மாவு மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். மஞ்சள் தூள், கரம் மசாலா, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மாங்காய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
2.இப்போது, படிப்படியாக சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவை உருவாக்க வேண்டும். (இறால்களில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் அதிக தண்ணீர் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்).
3.இந்த கலவையை சுமார் 15-20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். பிறகி மிதமான தீயில் கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, இறால்களைச் சேர்க்க வேண்டும். அவை பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை வறுக்கவும். (இது வெந்து வருவதற்கு சுமார் 4-5 நிமிடங்கள் எடுக்கும்).
4. இப்போது இறாலை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அமிர்தசாரி இறால் பொரியல், தொட்டுக்கொள்ள பக்கத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் புதினா சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.
இறாலின்நன்மைகள்
இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் இதை தயக்கம் இன்றி உண்ணலாம் என சொல்லப்படுகிறது.
சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் அதன் கதீர் வீச்சுகளால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். இறால்கள் சாப்பிடுவது சருமத்தை அழகாக்க உதவும் என சொல்லப்படுகிறது.
இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. எனவே சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும் என சொல்லப்படுகிறது.
இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. எனவே சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
Ladies Finger Fry :ஞாபக சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காய்...மொறு மொறு ஃப்ரை இப்படி செய்து பாருங்க...