கேரளா ஸ்டைலில்  பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.  காரமாகவும், சுவையாகவும் சிக்கனை சாப்பிட விரும்புவோருக்கு மிகவும் ஏற்ற டிஷ் இது.  மிளகாயின் பயன்பாடு இந்த உணவுக்கு காரமான சுவையை அளிக்கிறது. இதை சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். 






தேவையான பொருட்கள் 



  • 500 கிராம் கோழிக்கறி

  • 1 வெங்காயம் (நறுக்கியது)

  • 1 பச்சை மிளகாய்

  • 1 துண்டு இஞ்சி

  • 2 பல் பூண்டு

  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

  • 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1/2 டீஸ்பூன் முழு கருப்பு மிளகுத்தூள்

  • 1 தேக்கரண்டி வினிகர்

  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்

  • 1.5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • 1 கொத்து கறிவேப்பிலை

  • உப்பு தேவைக்கேற்ப

  • 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

  • 1/4 தேக்கரண்டி மிளகு தூள்








செய்முறை


 

1. முதலில் கோழிக்கறியை எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும் . பின் முழு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 


2. அடுத்து கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
 


3. பின் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை அதில் சேர்க்கவும். சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

 

4. இப்போது, ​​தயார் நிலையில் வைத்திருக்கும்  கோழிக்கறி துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதனுடன் வினிகர் சேர்த்து, கடாயை மூடி சிறிது நேரம்  வேக விட வேண்டும்.  தண்ணீர் நன்றாக வற்றி வரும் வரை வேக விட வேண்டும். 
 


5. பின் திறந்து, கரகரப்பாக அரைத்த மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

 

6. கோழிக்கறியை 4-5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் பொன்னிறமாக வேகும் வரை கிளறி விட்டு வேக விட வேண்டும். தொடர்ந்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

 

7.  இப்போது  கேரளா ஸ்டைலில் பெப்பர் சிக்கன் தயாராகி விட்டது. இதில் சிறிது கறிவேப்பிலை இலைகளை தூவி இறக்கி விட வேண்டும். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

 

மேலும் படிக்க,