அபரிதமான ஆரோக்கிய நலன்களை கொண்ட காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று.  இது நீர்ச்சத்து மிகுந்த காய் வகை என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.  இதை உணவில் சேர்த்துக்கொள்ள  ஏராளமான காரணங்கள் இருந்தாலும் பலர் ஏனோ விரும்புவதில்லை. சுரைக்காயில் கலோரி மிகக் குறைவு .வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. சுரைக்காயை சமைத்தும் உண்ணலாம் ஜூசாகவும் குடிக்கலாம்.  தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


சுரைக்காய் ஜூசை அடிக்கடி குடிப்பதன் மூலம் முடி நரைப்பதை தடுக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  அதாவது  சுரைக்காய் ஜூஸ் கறுப்பான மற்றும் பளபளப்பான கூந்தலை  நீண்ட காலத்திற்கு தக்கவைக்க உதவும் எனக்கூறப்படுகிறது. வெயில் காலத்தில் வெயிலைத் தணிக்க ஏதாவது பானத்தை அருந்த விரும்பினால் நீங்கள் ​​சுரைக்காய் ஜூஸை தேர்ந்தெடுக்கலாம். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இது "ஒரு  தாகத்தைத் தணிக்கும்" மற்றும் உடலை குளிர்விக்க உதவும், அதே நேரத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.


சுரைக்காய் மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது என்றும்  மன அழுத்தத்தைத் தடுக்கும் காரணிகள் இதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதனுடன் வேறு எதையும் சேர்க்காமல் வெறுமனே சுரைக்காய் ஜூசை மட்டும் குடிப்பதுதான் பல்வேறு பலன்களை தரும் என கூறப்படுகிறது. 


உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் நம் ஒவ்வொருவம் அக்கறை  கொண்டவராக இருக்கவேண்டாம். பொதுவாக அனைத்து வகை காய்கறிகளிலும் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளன. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நமக்கு பிடித்த சில காய்கறி வகைகளை மட்டுமே உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்கிறோம். மற்ற காய்கறிகளை ஒதுக்கி விடுகிறோம். எனவே முடிந்த அளவு இது போன்று அபரிதமான சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இந்த சுரைக்காய் ஜூஸை அருந்தி பல்வேறு உடல் நலன்களைப் பெறலாம். 


மேலும் படிக்க, 


Latest Gold Silver Rate : வாரத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. சவரனுக்கு 120 ரூபாய்: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ..


Breaking News LIVE Tamil : மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம்