Just In

Fathers Day 2025 Wishes: உன் ரத்தத்தின் மிச்சம் நான்.. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.. இதுதான் வாழ்த்து படங்கள்

Fathers Day 2025 Wishes: தந்தை எனும் தாயுமானவன்.. தந்தையர் தினத்துக்கு இந்த போட்டோவோட வாழ்த்துகளை அனுப்புங்க..

கல்யாணமா? காதுகுத்தா? விசேஷ நாளில் வீட்டு வாசலில் இப்டி கோலம் போடுங்க.. இவ்ளோ மாடலா?

சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -

வந்தே பாரத் ரயில்களுக்கு டிக்கெட் புக் செய்யும்போது அசைவ உணவை தேர்ந்தெடுக்கலாம்
Bakrid 2025 Date: பக்ரீத் பண்டிகை எப்போது? தேதி, நேரத்தை குறித்துக்கொள்ளுங்கள்! முழு விவரம் இங்கே!
Tutti Fruity : டூட்டி ஃபுரூட்டி கேக்கை மிக எளிமையா தயாரிக்கலாம்.. ஸ்டெப் ஸ்டெப்பா கொடுத்திருக்கோம்..
சுவையான டூட்டி ஃப்ரூட்டி கேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
Continues below advertisement

டூட்டி ஃப்ரூட்டி கேக்
தேவையான பொருட்கள்
மைதா - 3/4 கப், பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன், டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 1/3 கப், எண்ணெய் - 1/8, கப் மற்றும் 1 டேபிள் ஸ்பூன், வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 1/4 கப், கெட்டியான தயிர் - 1/4 கப், வினிகர் - 1/2, டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்.
செய்முறை
ஒரு வட்டக் கிண்ணத்தில் சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃபுரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, சல்லித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃபுரூட்டியை தனியாக ஒரு கின்ணத்தில் வைத்துக் கொண்டு, மீதமுள்ள டூட்டி ஃப்ரூட்டியை மைதா கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது மற்றொரு கிண்ணத்தில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் எல்லா கலவைகளையும் ஒன்றாக மிக்ஸ் செய்துக் கொள்ள வேண்டும்.
பின்பு 180 டிகிரி செல்சியஸில் மைக்ரோ ஓவனை சூடுப்படுத்த வேண்டும். பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்ற வேண்டும்.
பின் அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃபுரூட்டியை தூவி, பின்னர் மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து, 25லிருந்து 30 நிமிடம் வரை பேக்கிங் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தயார்.
மேலும் படிக்க
Continues below advertisement
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.