தேவையான பொருட்கள்



அரை கிலோ காளான்

2 கப் பாசுமதி அரிசி

ஒரு நறுக்கிய வெங்காயம்

2 தக்காளி நறுக்கியது

2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

கால் கப் கொத்தமல்லி நறுக்கியது

கால் கப் புதினா நறுக்கியது

3 பச்சை மிளகாய் நறுக்கியது

3 ஸ்பூன் எண்ணெய்

3 ஸ்பூன் நெய்

அரை கப் தேங்காய் பால்

2 ஸ்பூன் தயிர்

2 ஸ்பூன் மிளகாய் தூள்

2 ஸ்பூன் மல்லி தூள்

அரை ஸ்பூன் சோம்பு தூள்

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்

3 கப் தண்ணீர்

தேவையான அளவு உப்பு

தாளிக்க தேவையான பொருட்கள்

ஒரு பிரியாணி இலை

மூன்று ஏலக்காய்

இரண்டு பட்டை இலவங்கம்

ஐந்து கிராம்பு
 


செய்முறை


முதலில் காளானை நன்றாக கழுவி எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

இதில் நறுகிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா உள்ளிட்டவற்றையும் சேர்த்து, வதக்க வேண்டும். பின்னர் அதோடு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும், காளானை சேர்த்து பிரட்ட வேண்டும். பின்னர் அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, சோம்பு பொடி, தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதே வேளையின், மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியைக் கழுவி சேர்த்து,  அதனுடன் 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்ட பின் இறக்க வேண்டும். இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி தயார். ( பாசுமதி அரிசி விரைவில் வேக கூடியதாக இருந்தால் இரண்டு விசில் போதுமானது)


மேலும் படிக்க 


IPL Auction 2024: யார் இந்த ராபின் மின்ஸ்? ஐ.பி.எல். ஏலத்தில் ஆச்சரியம் தந்த பழங்குடியின வீரர்! 3.6 கோடிக்கு ஏலம்


Southern Rain Damage: தென்மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு! பயணத்திட்டத்தை மாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!


Sani Peyarchi 2023: இன்று சனிப்பெயர்ச்சி! மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு செல்லும் சனி பகவான்! திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்