News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

கமகமக்கும் கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?

பின்னர் ஃபிரஷான வாழை இலை உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கடையிலோ இருந்தால் அதனை வாங்கி வந்து , மசாலா தடவிய மீனை வைக்கவும்.

FOLLOW US: 
Share:

வாழை இலையில் கேரளா ஸ்டைலில் வேகவைத்த மீன் செய்வது எப்படி, நீங்கள் கடல் உணவுகளை விரும்புபவராக இருந்தால், இந்த ரெசிபி கண்டிப்பாக உங்களில் ஃபேவெட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.தன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகையில், இது ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது.ஏனெனில் வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்கள் வெளியேறாமல் தக்க வைக்கப்படுகிறது. சரி எப்படி செய்வது இந்த வேக வைத்தம் yummy  மீன் ரெசிபி என பார்க்கலாம்.

மீன் வேக வைக்க  தேவையான பொருட்கள்:

வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள்
 பெரியவெங்காயம்  – ஒன்று அல்லது சின்ன வெங்காயம் இரண்டு கைப்பிடி அளவு.
 தக்காளி – ஒன்று
எலுமிச்சை சாறு  - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை -  சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்.


வாழை இலையில் வேகவைத்த மீன் செய்முறை:

முதலில் வாங்கி வந்த மீனை சுத்தமாக கிளீன் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரையில் மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டாமல் முழு மீனாகவே சுத்தம் செய்வது சிறந்தது. ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் மீன் துண்டுகள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு இந்த கலவையை ஊற வைக்க வேண்டும் . இப்போது தேங்காய், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் சீரகத்தை மிக்ஸி சாரில் சேர்த்து ஒரு பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனை தக்காளி , வெங்கயத்துடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள் .

பின்னர் இந்த பேஸ்டை இதனை ஊர வைத்திருந்த மீனை எடுத்து , அதில் அரைத்து வைத்த மசாலா கலவையை எல்லா இடத்திலும் சேரும்படியாக  தடவிக்கொள்ளுங்கள் (மீனை வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்). பின்னர் ஃபிரஷான வாழை இலை உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கடையிலோ இருந்தால் அதனை வாங்கி வந்து , மசாலா தடவிய மீனை வைக்கவும். வாழை இலையை சுத்தமான தண்ணீராக கழுவ மறந்துவிடாதீர்கள். வாழை இலையை மடித்து , அதனை நூல் கொண்டு கட்டிவிடுங்கள். ரெடியான மீன் வாழை இலையை இட்லி  வேக வைக்கும் பாத்திரம் அல்லது தவா உதவியுடன் வேக வைத்துக்கொள்ளுங்கள். மிதமான சூட்டில் வேக வைப்பது அவசியம் . வாழை இலை முற்றிலுமாக வெந்த பிறகு எடுத்து பிரித்தால் , அட ! அட! கமகமக்கும் கேரளா ஸ்பெஷல் வேக வைத்த மீன் தயார்!

Also Read | June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

Published at : 31 May 2022 02:08 PM (IST) Tags: meen polichathu keral recipe fish recipe

தொடர்புடைய செய்திகள்

125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

டாப் நியூஸ்

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?