சிலர் கடைகளில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிடுவதை விரும்புவதில்லை. ஆனால் குழந்தைகளோ விளம்பரங்களில் பார்க்கும் நூடுல்ஸ்களை பார்த்து அதை சாப்பிட வேண்டும் என அடம் பிடிப்பார்கள். ஆனால் இனி உங்கள் குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டால், நீங்கள் வீட்டிலேயே நூடுல்ஸ் தயாரிக்கலாம். இது ஆரோக்கியமானதாக இருக்கும். கோதுமை மாவு, தண்ணீர், உப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு மிக எளிமையாக நூடுல்ஸ் செய்து விட முடியும். வாங்க வீட்டிலேயே மேகி நூடுல்ஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்



  • 2 கப் முழு கோதுமை மாவு 

  • 1/2 கப் தண்ணீர் 

  • 1/2 தேக்கரண்டி உப்பு


செய்முறை






1.ஒரு பெரிய  கிண்ணத்தில், முழு கோதுமை மாவு மற்றும் உப்பு  சேர்த்து மாவை மென்மையாக கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை கரைக்கும் போது படிப்படியாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். 


 

2. மாவை மூடி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். 

 

3. இப்போது மாவை சப்பாத்தி செய்ய சிறு  சிறு உருண்டைகளாக எடுப்பது போன்று எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்



4. ஒவ்வொரு பகுதியையும் மெல்லியதாக உருட்டிக் கொள்ளவும். 


 

5.ஒரு கூர்மையான கத்தியால், உருட்டிய மாவை மெல்லிய கீற்றுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  நூடுல்ஸ் தயாரிக்கும் கருவி மூலம் தயாரித்துக் கொள்ளலாம். 

 


6. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 

7.வீட்டில் தயாரிக்கப்பட்ட அட்டா மேகி நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில்  போட்டு 2-3 நிமிடங்கள் அல்லது அவை மேற்பரப்பில் மிதக்கும் வரை வேக வைக்க வேண்டும்.

 

8.நூடுல்ஸை வடிகட்டி, ஒட்டாமல் இருக்க குளிர்ந்த நீரில் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் தயாராகி விட்டது. இதை நீங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து தயாரித்து பறிமாறலாம்.