Sweet Potato Idiyappam : முதலில் 4 மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்து அதை கரண்டியால் மசித்துக் கொள்ள வேண்டும். 


ஒரு கப் இடியாப்பம் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 


ஒரு கப் கொதிக்க வைத்த சுடு தண்ணீரை மாவில் சேர்த்து கரண்டியால் கலந்து விட வேண்டும். பின் இதனுடன் மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இவை இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். இது சற்று தளர்வாக பிசைந்த சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். 


இப்போது இட்லி தட்டி எண்ணெய் தேய்த்து எடுத்துக்கொள்ளவும். பிசைந்த மாவை இடியாப்பம் அச்சில் சேர்த்து ஒவ்வொரு இட்லி குழியிலும் இடியாப்பமாக பிழிந்து விட வேண்டும். இதை 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால் ஒரு சூப்பரான இடியாப்பம் கிடைக்கும். இதை நெய் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலுடன் வைத்து சாப்பிடலாம். அல்லது குருமா உடன் வைத்தும் சாப்பிடலாம். சுவை வேற லெவலில் இருக்கும். 


சர்க்கரைவள்ளிக்கிழங்கின் நன்மைகள் 


சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.பீட்டா கரோட்டின் நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது, இது புதிய தோல் செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் என்று சொல்லப்படுகின்றது. புற ஊதா கதிர்கள் போன்றவற்றால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று சொல்லப்படுகிறது.


சர்க்கரைவள்ளி கிழங்கு ஊட்டச்சத்தின் ஒரு சிறந்த மூலமாகும், இது ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு அவசியமாகும். இது நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் என சொல்லப்படுகிறது. 


சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியமான கண்களுக்கு அவசியம். பீட்டா கரோட்டின் நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.  இது ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க உதவும் என சொல்லப்படுகிறது. இந்தக் கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும்.  அவை நம் உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கு அவசியமானவை. இந்த கிழங்கை தொடர்ந்து உட்கொள்வது நமது ஆற்றல் அளவை அதிகரிக்கவும், நமது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத்தன்மை மேம்படுத்தவும் உதவும் என சொல்லப்படுகின்றது. 


மேலும் படிக்க 


Cooking And Kitchen Tips: தேங்காய் ஃப்ரெஷ் ஆக இருக்க... சாம்பாரின் சுவை அதிகரிக்க.. சூப்பர் சமையல் குறிப்புகள்!


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! இப்படி செய்தால் ஒரு கரண்டி சாதம் எக்ஸ்ட்ரா சாப்புடுவிங்க!


Oats Smoothie: ஓட்ஸ் ஸ்மூத்தி: சர்க்கரையே தேவையில்லை சுவை சூப்பரா இருக்கும்...செய்முறை இதோ!