தேவையான பொருட்கள் 


கத்தரிக்காய் - 8


பெரிய வெங்காயம் -2 


சின்ன வெங்காயம் - 10 


தேங்காய் துருவல் -4 ஸ்பூன் 


தக்காளி - 2


பூண்டு  - 6 பற்கள் 


இஞ்சி - அரை இஞ்ச் 


சீரகம் - 1 ஸ்பூன் 


மிளகு - முக்கால் ஸ்பூன் 


சோம்பு - 1 ஸ்பூன் 


தனியாத்தூள் - 1 ஸ்பூன்


காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்


கடுகு - 1 ஸ்பூன்


கறிவேப்பிலை - 1 கொத்து 


எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும், 2 நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கண்ணாடிப்பதம் வந்ததும் . பின் 6 பல் பூண்டு, அரை இஞ்ச் அளவு நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். 


நறுக்கிய 2 தக்காளிகளை சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி சாஃப்ட் ஆகும் வரையில் வதக்கி விடவும். 


இப்போது ஒரு ஸ்பூன் சீரகம், முக்கால் ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு , கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 


கடைசியாக 4 ஸ்பூன் தேங்கய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஆற வைக்கவும். 


இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மிக குறைவாக தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 


8 கத்தரிக்காய்களை எடுத்து அதை மேல் பகுதியில் மட்டும் 4 ஆக வெட்டிக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை சிறிதளவு எடுத்து கத்தரிக்காய்க்குள் வைக்க வேண்டும். 


இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். கத்தரிக்காய்களை இதில் சேர்த்து உடையாமல் நன்றாக வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 


இப்போது அதே கடாயை கழுவி விட்டு அடுப்பில் வைத்து 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் 10 நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.


ஒரு கப் கறிவேப்பிலையும் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்க்கவும். ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து புளி கரைசலை சேர்க்கவும்.


உங்களுக்கு கிரேவி எந்த பதத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிரேவியை கொதிக்க விடவும்.


இப்போது எண்ணெயில் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை கிரேவியில் சேர்க்க வேண்டும். ஒரு நிமிடம் கிரேவியை கொதிக்க விட்டு இறக்கி கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.