தேவையான பொருட்கள் 


ஓட்ஸ் - கால் கப்


பேரீட்சைப்பழம் -2 


வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்


வாழைப்பழம் -1


செய்முறை 


ஓட்ஸை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, பேரீட்சைப் பழங்களை வெட்டி ஓட்சுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 


பின் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் தோல் நீக்கிய இரண்டு ஸ்பூன் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். 


வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


வேர்க்கடலை மற்றும் பேரீச்சைப் பழத்தில் உள்ள இனிப்பே இதற்கு போதுமானதாக இருக்கும் என்பதால் இதில் இனிப்பு சேர்க்க தேவையில்லை. இனிப்பு அதிகம் வேண்டும் என விரும்புவோர் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம். 


இந்த ஸ்மூத்தி மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானதும் கூட. 


ஓட்ஸின் நன்மைகள் 


ஓட்ஸில் அதிக அளவிலான மெக்னீசியம் உள்ளது. இது ஆற்றல் உற்பத்திக்கும், நொதி செயல்பாட்டிற்கும் உதவுவதாக கூறப்படுகிறது. இரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும்  இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துகொள்ளவும் இது உதவும் என கூறப்படுகிறது. 

ஓட்ஸ் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவு ஆகும். மெல்ல செறிக்கும். பசியை குறைப்பதோடு, எடை குறைப்பிற்கும் உதவும் என சொல்லப்படுகிறது. இதில்  காணப்படும் சோலிசிஸ்டோகினின்  பசிக்கு எதிராக போராடும் ஹார்மோன் என்று கூறப்படுகிறது.  

ஓட்ஸ் சருமத்திற்கு பல்வேறு பயன்களை தரும் என கூறப்படுகிறது. ஓட்ஸ், நம்முடைய சருமத்தின் Ph அளவை சீராக்கவும் உதவுவதுடன், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துகொள்ளவும், மிருதுவாக மாற்றவும் உதவும் என சொல்லப்படுகின்றது. 


ஓட்ஸில் அதிகளவில் நார் சத்து இருப்பதால், அவை கரையும் மற்றும் கரையா நிலையிலும் காணப்படுகிறது. இதனால், குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.  


மேலும் படிக்க 


Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!


Ragi Idiyappam:கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்... இப்படி செய்தால் பெர்ஃபெக்ட்டா வரும்!