வீட்டில் தோசை அல்லது இட்லி மாவு இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட ஒரு சில பொருட்களை வைத்து ஒரு ஆரோக்கியமான ஆப்பம் செய்யலாம். இதை மிக குறைந்த நேரத்தில் செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர்.
ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் ரவை, கால் கப் கோதுமை மாவு ஒரு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், ஒரு வெட்டிய வெங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை இலை, அரை டீஸ்பூன் உப்பு, தயிர் அரை கப் தயிர் ( புளிப்பு அதிகம் ஏறாத தயிர்)
இதை அரைத்துக் கொள்ள வேண்டும். வேண்டு என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். அதிக கெட்டியாக இருந்தால் சற்று தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
உடனடியாக தோசை செய்ய வேண்டும் என்றால், இதில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து உடனடியாக ஆப்பம் சுடலாம்.
போக்கிங் சோடா சேர்க்க விருப்பம் இல்லை என்றால். இந்த மாவை 20 நிமிடம் ஊறவைத்து பின் இதை ஆப்பமாக ஊற்றலாம்.
ஒரு பான் சூடு செய்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின் ஒரு கரண்டி மாவை எடுத்து பான் நடுவில் ஊற்றி அப்படியே விட்டு விட வேண்டும். இதை நாம் தோசை செய்வது போன்று பரப்பி விட கூடாது.
இது வெந்து சாஃப்டாக புஸ் புஸ்வென இருக்கும். இது ஆரோக்கியமான காலை உணவும் கூட. இதை நாம் கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Peanut Dosa :தோசை மாவு இல்லையா? ஆரோக்கியமான வேர்க்கடலை தோசை.. காரச்சட்னி : இப்படி செய்து அசத்துங்க!
Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!