தேவையான பொருட்கள் 


பாதாம் பருப்பு- 150 கிராம், நெய் – 3/4 கப்,  ரவை - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1/2 கப், சர்க்கரை - 1 கப், குங்குமப்பூ - சிறிதளவு,  முந்திரி -10, திராட்சை - 10 கிராம்.


செய்முறை




பாதாம் பருப்பை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


அடிகனமான கடாயில் நெய் விட்டு ரவையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பிறகு அதே கடாயில் பாதாம் விழுதைச் சேர்த்துக் குறைந்த தீயில் 15 நிமிடம் கிளற வேண்டும்.


விழுது சிறிது ப்ரௌன் நிறம் வந்ததும் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும்.


பிறகு இதில் பாலில் ஊறவைத்து எடுத்து வைத்த குங்குமப்பூ, முந்திரி, திராட்சையை நெய்யில் தனித்தனியாக வறுத்து சேர்த்து விட வேண்டும். 


அவ்வளவுதான் சுவையான பாதாம் கேசரி தயார். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 


பாதாமின் பயன்கள் 


பாதாம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்றும், உயர் அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் அளவை அதிகரிக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.


பாதாமில் கலோரிகளில் அதிகமாக இருந்தாலும் அவை எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க உதவும் என கூறப்படுகிறது.


பாதாமில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து விரைவில் வயறு நிறைந்த உணர்வை தரும்.


பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்  எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.


இரைப்பைக் குழாயின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்க பாதாம் உதவும் என சொல்லப்படுகிறது.


பாதாமில் உள்ள அதிகளவு வைட்டமின் ஈ கண்களைப் பாதுகாக்க உதவுகிறது.பாதாம் பருப்பை அளவோடு சாப்பிட்டு வந்தால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும். 


அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பாதாம் பயன்படுத்தப்படுகிறது.  பாதாமில் க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலியில் உள்ள ஃபிளாவனாய்டு உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், சரும வயது எதிர்ப்புப் பண்பையும் கொண்டுள்ளது. 


மேலும் படிக்க


TN Assembly: ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு தனித்தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!


Latest Gold Silver Rate: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.480 குறைந்தது.. இன்றைய நிலவரம் இதோ..


PM Modi In UAE: அபுதாபியில் முதல் இந்து கோயிலை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி