இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட சுவையான சட்னிகளை நாம் எப்போதும் விரும்புவோம். தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி, சட்னி, கொத்தமல்லி சட்னி என பல வகை சட்னிகள் இருந்தாலும் சிக்மகளூர் சட்னி கொஞ்சம் ஸ்பெஷல்தான். வாங்க இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2
எள்ளு – 1 ஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
புளி – பாதி நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வரகொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் வறுபட்டு வாசம் வந்தவுடன், இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, எள்ளு, புதினா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும். இவை அனைத்தும் வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் உப்பு மற்றும் புளியை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தும் ஆறியவுடன் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான சட்னி தயார்.
மேலும் படிக்க