கால்சியம் உடலுக்கு அவசியமான பொருள். எலும்புகள், தசைகள் வளர்ச்சிக்கு அடிப்படையான சத்து அது. ஆனால், பலரும் குறிப்பாக பெண்கள் கால்சியம் குறைபாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். கால்சியம் குறைபாடு ஏற்படும்போது எந்த உணவுகளின் மூலம் நமது உடலுக்குத் தேவையான கால்சியத்தை உட்புகுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.
பால்
கால்சியம் அதிகம் இருக்கும் உணவு பொருளில் ஒன்று பால். ஆயினும், இதில் வைட்டமின் டி கிடையாது. நமது உடல் கால்சியத்தை உறிஞ்சிக்கொள்ள அடிப்படையான சத்து வைட்டமின் டி. இந்த சத்தை சமன்படுத்த முடிந்தால், தினமும் பால் எடுத்துக்கொள்வது நமது உடலுக்குத் தேவையான கால்சியத்தை வழங்கும்.
சோய் பால்
பால் மற்றும் அது சார்ந்த பொருளுக்கான அலர்ஜி இருக்கும் பட்சத்தில், சோய் பால் குடிக்கலாம். கால்சியம் மட்டும் அல்லாது, வைட்டமின் டி மற்றும் புரதச் சத்து நிறைந்த பால் இது.
பாதாம்
ஒரு கப் பாதாம் 385 மில்லிகிராம் அளவு கால்சியத்தைக் கொண்டுள்ளது. நமது உடலுக்குத் தேவையான கால்சியத்தில் மூன்றில் ஒரு பங்கு இது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
டோஃபூ
குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ள, புரதச் சத்து நிறைந்த டோஃபூ கால்சியத்திற்கான உணவு பொருள். ஆயினும், வெவ்வேறு பிராண்டுகளில் கால்சியம் அளவு வகைப்படும். நமக்குத் தேவையான டோஃபூவைப் பார்த்து, லேபிளைப் படித்து வாங்குவது நல்லது.
கொண்டைக்கடலை
இந்த கடலை எல்லா சத்துகளின் இருப்பிடம் என்று சொல்லலாம். நார்ச்சத்து மற்றும் பிற உயிர்ச் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள் இது. வீகன் உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ள அனைவரும் கால்சியதிற்கான தேவையை இதில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு கப் கொண்டைகடலையில் 75 மில்லிகிராமிற்கும் அதிகமான கால்சியம் உள்ளது.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்