நீரிழிவு குறைபாடு இருப்பவர்களுக்கு வெயில் காலம் மற்றொரு அவஸ்தை. நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் உடல் நீரை இழந்தால், அது நரம்புகளைப் பலவீனம் ஆக்கும் அளவிற்குப் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் உடல் நீரை இழக்கும்போது ரத்தத்தில் க்ளுகோஸ் அளவும் வேகமாக அதிகரிக்கும். ஆகையால், வெயில் காலங்களில் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களை எப்படி பார்த்துக் கொள்ளலாம்? என்ன மாதிரியான உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும்?
ஆரோக்கியமான மாவு உணவுகள்
மாவுச் சத்து குறைவாக உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், பயறுகள், பீன்ஸ், கொழுப்பு குறைவாக உள்ள பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இவற்றுள் அடங்கும். இவை ரத்தத்தில் மெதுவாக க்ளுகோசை பரவ வைக்கும். வெள்ளை சக்கரை மற்றும் மற்ற மாவு சார்ந்த பதார்த்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
நார்ச்சத்து
சீரணத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ரத்தத்தில் க்ளுகோஸ் அளவைப் பராமரிக்கும் பண்பும் நார்ச்சத்திற்கு உண்டு. பழங்கள் மற்றும் பயறு வகைகளிடம் அதிகம் நாச்சத்து உண்டு.
பழங்கள்
பொதுவாகவே பழங்கள் அத்தனை சத்துகளின் இருப்பிடம் ஆகும். மேலும், வெயில் காலங்களில் பழங்கள் ஏன் தவிர்க்க முடியாதவை என்றால் இவை உடலில் நீர்ச்சத்தைக் குறைய விடாமல் காக்கும். நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு பழங்கள் வெயில் காலங்களில் அதனால் தான் அருமருந்தாகின்றன. தர்பூசணி, தக்காளிப் பழங்கள், கீரை வகைகள், வெள்ளரிப் பிஞ்சு, குடமிளகாய், பெர்ரி பழங்கள் உடலுக்குத் தேவையான நார்ச் சத்து மற்றும் நீர்ச் சத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகளையும் வழங்குகின்றன.
இவையோடு, மாம்பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் எவ்வளவு மாம்பழங்கள் உண்ணலாம்? சாதம், ரொட்டி போன்றவைக்குப் பதிலாக புரதம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது மாம்பழங்களையும் சேர்த்து உண்ணலாம். மேலும், எப்படியான மாவுச் சத்து உள்ள உணவுகளை உண்டாலும், அவற்றைப் பிரித்து பிரித்து உண்ணப் பழக வேண்டும்.
மேலும் படிக்க..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்