கடல் உணவுகளில் நண்டு தனி சுவை உடையது.  நண்டில் இருக்கும் சதைப் பகுதி நல்ல சுவை உடையதாக இருக்கும். நண்டில் கிரேவி, மசாலா போன்றவற்றை செய்யலாம். இதில் நண்டு மசாலா நல்ல சுவை உடையதாக இருக்கும்.  நண்டு ப்ரியர்களுக்கு இதன் சுவை மிகவும் பிடிக்கும். இதை வெள்ளை சாதத்துடன் வைத்து சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருக்கும். வெரைட்டி ரைஸ் உடன் வைத்து சாப்பிடவும் நண்டு மசாலா நன்றாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர்.  தற்போது நண்டு மசலா எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


நண்டு – 1/2 கிலோ, வெங்காயம் – 2 , பூண்டு – 4 , பல் இஞ்சி – 1 துண்டு,  மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,  கசகசா – 1/2 டீஸ்பூன் , சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருஞ்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,  மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,  மல்லியதூள் – 1 டேபிள் ஸ்பூன்,  கறி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்,  நல்லெண்ணெய் – 2டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,  தக்காளி – 2 , உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப்பால் – 1 கப்.


செய்முறை 


முதலில் மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் மேற்கூறிய அனைத்து மசாலா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும்,  கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மசாலாவை கடாயில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு அதில் நண்டு அனைத்தையும் சேர்த்து வேகவிட வேண்டும்.


நண்டு பாதி வெந்த நிலையில் அரைத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலை அதில் சேர்க்க வேண்டும்.  இதனை 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து நண்டு மசாலாவை அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான நண்டு மசாலா தயார். இதனை வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க


Kamalhassan: தந்தி அனுப்பிய கருணாநிதி; முற்றிய கருத்து மோதல் - நேருக்கு நேர் பதிலளித்த கமல்ஹாசன்


IND Vs NZ, Innings Highlights: ஆட்டம் காட்டிய கிங் கோலி... நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!


”உங்களை நம்பிதான்... இதையெல்லாம் செய்க” - திமுக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின்