விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இன்றைய (அக்டோபர் 22) போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.


இதில், டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கனர். 


இதில் 9 பந்துகள் வரை களத்தில் நின்ற  டெவோன் கான்வே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதேபோல் மறுபுறம் வில் யங் 27 பந்துகள் வரை களத்தில் நின்று 17 ரனகள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தங்களது அதிரடியை வெளிப்படுத்தினர். அதன்படி, 87 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 75 ரன்கள் எடுத்தார் ரச்சின். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்.


இவர்களது ஃபார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் திணறியது இந்திய அணி. 8 வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி மூன்றாவது விக்கெட்டை இழந்த போது 178 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.


5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி:


இடையில் 20 ஓவர்கள் வரை ஒரு விக்கெட்டை கூட எடுக்கத இந்திய அணி கடைசி பத்து ஓவர்களில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது. அதன்படி, இன்றைய போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். மொத்தம் 10 ஓவர்கள் வீசிய அவர் 54 ரன்கள் கொடுத்த 5 விக்கெட்டுகளை எடுத்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்தது.


274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். மறுபுறம் சுப்மன் கில் நிதானத்தை கடைபிடித்தார்.


ஆட்டம் காட்டிய கிங் கோலி:


40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்து லாக்கி பெர்குசன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மன் கில் 26 பந்துகளில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த விராட் கோலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அதன்படி 104 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களும் ,கே.எல்.ராகுல் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க சூர்ய குமார் யாதவ் 2 ரன்களில் நடையைக் கட்டினர். அடுத்து வந்த ஜடேஜா 35 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக  4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்தியா தொடர்ந்து 5 வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 


மேலும் படிக்க: _Fielder Of The Day: டைவ் அடித்து கேட்ச்: சிறந்த பீல்டருக்கான விருதை கேட்கும் ஸ்ரேயாஸ்...


 


மேலும் படிக்க: IND vs NZ WC Records: 20 வருடங்களாக கிடைக்காத வெற்றி! உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?