பிரியாணி, வெரைட்டி ரைஸ், சாதம் என சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்போ நீங்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. கொண்டை கடலை,  பாலக் கீரையைக் கொண்டு சுவையான சாதம் செய்யலாம். இந்த சாதம் நல்ல சுவையாக இருக்கும்.  கொண்டை கடலை மற்றும் பாலக் கீரை மசாலாக்களுடன் சேர்ந்து ஒரு நல்ல ஃப்ளேவர் கிடைக்கும். இந்த ரெசிபியை மிக குறைந்த நேரத்தில் ஈசியாக செய்து விட முடியும்.  வாங்க சென்னா பாலக் சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 


1 கப் கொண்டைக்கடலை (வேகவைத்தது), 1 கப் பாலக் கூழ், 1 கப் அரிசி ஊறவைத்தது, 2 பச்சை மிளகாய்,1 வெங்காயம் வெட்டப்பட்டது. 2 டீஸ்பூன் எண்ணெய், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1 வளைகுடா இலை, 2 பச்சை ஏலக்காய்,  2 கிராம்பு, 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், உப்பு சுவைக்கேற்ப, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு.


செய்முறை


1.முதலில் கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மறுபுறம், கீரையை கழுவி சுத்தம் செய்து அதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


2.இப்போது ஒரு ஆழமான கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலைகளை சேர்க்க வேண்டும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து கண்ணாடிப்பதம் வரும்  வரை வதக்க வேண்டும்.


3.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். இப்போது அரைத்த பாலக் கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். இதற்குப் பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை இதனுடன் சேர்க்க வேண்டும்.


4.இப்போது உப்பு, மல்லித்தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். ஊறவைத்த அரிசியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கிளற வேண்டும்.


5. 3 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளற வேண்டும்.  இப்போது கடாயை மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள்  வரை வேக வைக்க வேண்டும்.


6. இந்த புலாவை பிரஷர் குக்கரில் சமைத்தால் இரண்டு விசில் வரும் வரை விட வேண்டும். சூடான புலாவை சட்னி மற்றும் ரைதாவுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க


Kerala Blast: கேரளாவை உலுக்கிய குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!


AFG vs SL: அரையிறுதி கனவு யாருக்கு முட்டு போடும்..? புனேவில் இன்று இலங்கை- ஆப்கானிஸ்தான் மோதல்!


Thevar Jayanthi: முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா.. பசும்பொன்னுக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி..