உலகக் கோப்பை 2023ல் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. 


இந்த மைதானத்தில் இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில், எட்டு முறையும் 300க்கு மேல் ஸ்கோர் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்றைய போட்டியில் இந்த மைதானத்தில் நிறைய சிக்சர்களை காணலாம். பென் ஸ்டோக்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் இங்கு 4 போட்டிகளில் 16 சிக்சர்களை அடித்துள்ளனர். அதேபோல், வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு பந்துவீச்சில் ஒரு கை பார்க்கலாம். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 பந்துவீச்சாளர்கள் அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்களே. 


பிட்ச் எப்படி..? 


புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் அதிக ஸ்கோர் எடுக்கும் மைதானமாகவே உள்ளது. இங்கு எப்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.  வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முன்னோக்கி இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடந்த 8 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகளும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால், இதுவரைடாஸ் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம், சேஸிங் செய்வது இந்த பிட்சில் ஈஸியாக இருக்கும். 


அரையிறுதிக்கு தகுதிபெற முடியுமா..?


இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடி தலா 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான போட்டியில் உள்ளன. இந்த போட்டியின் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை, கடந்த இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. அதேபோல், இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் பெரிய சாதனையை செய்துள்ளது. மொத்தத்தில் இரு அணிகளுமே அரையிறுதிக்கு போட்டி போடுவது போல் தெரிகிறது.


இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்: 


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், அதிக வெற்றிபெற்று இலங்கை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.  


விளையாடிய மொத்த போட்டிகள்: 11


ஆப்கானிஸ்தான் வென்ற போட்டிகள்: 3


இலங்கை வென்ற போட்டிகள்: 7


போட்டிகள் சமநிலையில்: 0


முடிவு இல்லாத போட்டிகள்: 1


உலகக் கோப்பையில் எப்படி..? 


ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு ஆட்டங்களிலும் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015 இல் டுனெடினில் மஹேல ஜெயவர்த்தனே 100 ரன்கள் எடுத்ததால் லங்கன் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2019 பதிப்பின் போது கார்டிப்பில் இலங்கை 34 ரன்கள் [DLS முறையில்] ஆப்கானிஸ்தானை வென்றது.


கணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் பிளேயிங் 11 : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல்-ஹக், நூரல் அஹ்மத்

 

கணிக்கப்பட்ட இலங்கை பிளேயிங் 11 : பதம் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, லஹிரு குமார/துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷாங்க