ஊத்தாப்பம் ஏராளமானோருக்கு பிடிக்கும். அது கொஞ்சம் சாஃப்டாக இருக்கும். பொதுவாக ஊத்தாப்பம் மாவு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை மட்டும் கொண்டு தயாரிக்கப்படும். ஆனால் தற்போது நாம் பாலக்கீரை, பனீர் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், ரவை உள்ளிட்டவற்றை சேர்த்து தயாரிக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான ஊத்தாப்பம் ரெசிபி செய்யப்போறோம்.

இந்த ஊத்தாப்பம் சத்தானதாகவும், சுவையாகவும் இருக்கும். இதன் தயாரிப்பு முறையும் மிகவும் எளிமையானது. பாலக் பனீர் ஊத்தாப்பத்தை, க்ரீன் சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி மற்றும் குருமா ஆகியவற்றுடன் பரிமாறலாம். இந்த ஊத்தாப்பத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 

தேவையான பொருட்கள்

1 கப் பாலக் ப்யூரி, 1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1 Pack Fruit Salt , உப்பு - சுவைக்கேற்ப, 1/2 கப் பனீர் துருவியது, 1/2 வெங்காயம்  பொடியாக நறுக்கியது, 1/2 தக்காளி பொடியாக நறுக்கியது,  1 டீஸ்பூன் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, 1 டீஸ்பூன் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது.

செய்வது எப்படி?

1.ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அதனுடன் தயிர், உப்பு மற்றும் அரைத்தெடுத்த பாலக் கீரையை சேர்க்க வேண்டும்

2.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊத்தாப்பம் செய்வதற்கு ஏற்றவாறு  மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

3.ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, பனீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

4.இப்போது தயார் செய்து வைத்துள்ள மாவில், 1 Pack Fruit Salt சிறிது தண்ணீர் கலந்து, மாவு உப்பி வரும்.

5.ஒரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடாக்கி, இப்போது ஒரு டம்ளர் மாவை கடாயில் ஊற்றி பரப்பி, அதன் மீது தக்காளி, பச்சை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பனீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து ஊத்தாப்பத்தின் மீது தூவ வேண்டும்.

6.ஊத்தாப்பம் ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். இதே முறையில் மீதம் உள்ள மாவில் ஊத்தாப்பங்களை தயாரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான ஊத்தாப்பம் தயார்.

7. இப்போது சட்னியுடன் ஊத்தாப்பத்தை பரிமாறலாம். இதன் சுவை நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க

Telangana Election 2023: தெலங்கானாவில் அனல் பறக்கும் தேர்தல்; முக்கிய தொகுதிகள், கூட்டணி & பிரச்னைகள் - ஓர் அலசல்

AUS vs NZ: டிராவிஸ் ஹெட் அதிவேக சதம்.. இறுதியில் காட்டடி அடித்த கம்மின்ஸ், இங்கிலிஸ்.. NZ-க்கு 389 ரன்கள் இலக்கு!