தேவையான பொருட்கள் 


பீட்ரூட் -1/4 கிலோ


சின்ன வெங்காயம் -100 கிராம்


பச்சை மிளகாய் -2


இஞ்சி - 1 துண்டு 


பூண்டு - 8 பல்


கறிவேப்பிலை - கொத்து


காய்ந்த மிளகாய் -15


கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்


உளுந்து பருப்பு - 3 1/2 ஸ்பூன்


கடுகு தேவையான அளவு 


புளி - 1 நெல்லிக்காய் அளவு 


உப்பு - தேவையான அளவு 


நல்லெண்ணெய் - தேவையான அளவு 


 முதலில் கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை பருப்பு சேர்க்கவும் ஒரு நிமிடத்திற்கு பின் உளுந்தை சேர்க்கவும். 


இவை இரண்டும் பொன்னிறமானதும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இஞ்சி, பூண்டு , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 


பின் புளி, நறுக்கிய பீட்ரூட், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பீட்ரூட் முக்கால் பதம் வெந்ததும் இந்த கலவையை இறக்கி ஆற வைக்க வேண்டும். 


பின் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 


பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் கடுகு உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை சட்னி உடன் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி தயார். 


பீட்ரூட்டின் நன்மைகள் 


உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பீட்ரூட் உதவலாம்


 எலும்புகளை பலப்படுத்தவும் பீட்ரூட் உதவும் என்று கூறப்படுகிறது. 


பீட்ரூட் கீரைகள் மற்றும் பீட்ரூட் வேர்கள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும் இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. 



பீட்ரூட்டில் உள்ள அதிக நார்ச்சத்து, குடலில் நல்ல பாக்டீரியாக்கள் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் குடல் அழற்சி நோய்  மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. 


பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது இது சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும், உடற்பயிற்சியின் ஆக்ஸிஜன் செலவைக் குறைக்கவும் உதவும் என்று சொல்லப்படுகின்றது. 


மேலும் படிக்க 


Bread Chilli:காரசாரமான சில்லி பிரெட்... இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்..


Banana Bonda: தித்திப்பான வாழைப்பழ போண்டா! சூப்பர் சுவையில் அசத்தலாக செய்வது இப்படித்தான்!


Chicken Soup: சிக்கன் சூப் பிடிக்குமா? இப்படி செய்து பாருங்க சுவை சூப்பரா இருக்கும்...