சூப் பொதுவாக அனைவருக்குமே பிடித்த ஒன்று. காய்கறி மற்றும் அசைவ வகை சூப்கள் உள்ளன. ஜலதோஷம் உள்ளிட்டவை உள்ள போதும் அல்லது வெறுமனே நாம் சூப்களை சுவைக்க விரும்புவோம். இப்போது நாம் சிக்கன் சூப்பை சுவையாகவும் எளிமையாகவும் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். 


தேவையான பொருட்கள் 


சிக்கன் -1/2 கிலோ


சின்ன வெங்காயம் -10


தக்காளி -1


பச்சை மிளகாய் -2


இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்


பட்டை -1


லவங்கம்-1


மிளகாய் தூள் -1 ஸ்பூன்


தனியா தூள்-1 ஸ்பூன்


மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்


சீரகத்தூள் -1 ஸ்பூன்


மிளகு தூள் -1 ஸ்பூன்


உப்பு- தேவையான அளவு


எண்ணெய் -தேவையான அளவு


செய்முறை


சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.


வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். 


பின் அதில் பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.


வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.


பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும்.


அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட வேண்டும்.




 

6 விசில் வந்ததும் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி லெமன் ஜூஸ் பிழிந்து கலந்து விட்டு இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறினால் அருமையான செட்டிநாடு சிக்கன் சூப் தயார். 

 

மேலும் படிக்க