தேவையான பொருட்கள் 

வெண்டைக்காய் - 25கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்கரம் மசலா - 1 டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - வறுக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் வெண்டைக்காய்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அவற்றை இரண்டாக நறுக்கி நீள வாக்கில் சிப்ஸ் போல் நறுக்கிக்கொள்ள வேண்டும். அல்லது வழக்கம் போல் வட்டமாக நறுக்கி கொள்ளலாம்.

பின் வெண்டைக்காயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு , உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்

இதில் லேசாக தண்ணீர் தெளித்து வெண்டைக்காயில் மசாலா நன்கு ஒட்டுமாறு கலந்து கொள்ள வேண்டும். 

பின் அடுப்பில்  கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெண்டைக்காயை தூவி விட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார். 

 

வெண்டைக்காயின் பயன்கள் 

வெண்டைக்காய் சாப்பிட்டால்  ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்தம் விருத்தியாக வெண்டைக்காய் உதவும் என்று கூறப்படுகிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கவும்,  மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும் வெண்டைக்காய் உதவும் என கூறப்படுகிறது. 
கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க வெண்டைக்காய் உதவும் என சொல்லப்படுகின்றது. 
 
வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் உள்ளது. மேலும் இது கலோரி குறைவான காய் என்பதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் இல்லாமல் சாப்பிடலாம்
 
வெண்டைக்காயில் உள்ள  நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. 
 
வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.
 
மேலும் படிக்க