ஒரு சில சமையல் மற்றும் கிச்சன் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதுமானது. சமையலை எளிமையாக செய்து விடலாம். கிச்சனையும் அழகாக பராமரிக்கலாம். இப்போது நாம் பயனுள்ள சில சமையல் குறிப்புகளை தான் பார்க்க போகின்றோம்.


சப்பாத்தி மாவு பிசைவது எப்படி?


சப்பாத்தி மாவு பிசைவது என்பது பலருக்கும் கடினமான வேலையாகவே இருக்கும். சப்பாத்தியை விரும்பும் பல்வேறு இல்லத்தரசிகளும் பேச்சுலர்ஸ்களும் சப்பாத்தி மாவு பிசைவதை விரும்புவதில்லை. இனி நீங்கள் எளிமையான முறையில் வெறும் இரண்டே நிமிடங்களில் சப்பாத்தி மாவு பிசைந்து விடலாம். 


இரண்டு கப் சப்பாத்தி மாவை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.  சப்பாத்தி மாவு அளந்த அதே கப்பில் ஒரு கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இப்போது மிக்ஸியை சில நொடிகள் இயக்கி விட்டு மிக்ஸியை ஆப் செய்ய வேண்டும். 


இப்போது மிக்ஸியில் உள்ள மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சில நொடிகளில் ஈசியாக சப்பாத்தி மாவு பிசைந்து விடலாம். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளலாம். பிசைந்த உடன் சப்பாத்தி மாவு உருண்டையின் மீது அரை டீஸ்பூன் எண்ணெய்யை தடவி 20 நிமிடங்கள் மூடிப்போட்டு அப்படியே வைத்து விட வேண்டும். இந்த மாவில் சப்பாத்தி செய்தால் சப்பாத்தியும் மிக நன்றாக வரும்.


டிப்ஸ்:


சாம்பார், வத்தக்குழம்பு உள்ளிட்டவற்றை வீட்டில் செய்யும் போது சிலர் புளியை ஊறவைக்க மறந்து விடுவர். புளியை குழ்மபில் சேர்க்க வேண்டிய நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுவர். அந்த மாதிரியான நேரங்களில் ஒரு மிக்ஸி ஜாரில் புளியை சேர்த்து அதனுடன் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்ந்து 3 நொடிகள் மிக்ஸியை அரைத்து வடிகட்டினால் புளி கரைசல் கிடைத்து விடும். 


சிறு பருப்பு, துரம் பருப்பு உள்ளிட்டவற்றை குக்கரில் வேக வைக்கும்போது குக்கர் பொங்கி தண்ணீர் மேலே வந்து விடும். இதனால் அடுப்பு மற்றும் குக்கரை சற்று கஷ்டப்பட்டு கழுவ வேண்டி இருக்கும். எனவே இப்படி பொங்காமல் இருக்க. ஒரு கப் பருப்புக்கு இரண்டரை கப் தண்ணீர் வைத்தால் போதுமானது. 


மேலும் படிக்க 


ஊட்டச்சத்து நிறைந்த தோசை... டேஸ்டியான கேரட் சட்னி! இப்படி செய்து அசத்துங்க!


Ragi Idiyappam:கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்... இப்படி செய்தால் பெர்ஃபெக்ட்டா வரும்!


Pumpkin Morkuzhambu : வெள்ளைப்பூசணி மோர் குழம்பு.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்..