Valentine's Day, Father's Day, Mother's Day, Princess Day, Women's Day கேள்விப்பட்டிருப்போம், கொண்டாடியும் இருப்போம். ஆனால் எதிலும் தனித்துவம் காட்டும் நம் பாசக்கார உசிலம்பட்டிக்காரர்கள் தாய்மாமன் 'Day' கொண்டாடி உள்ளனர்.
"தாய் மாமன் சீர் உமந்து வாராண்டி, அவேன்... தங்க கொலுசு கொண்டு தாராண்டி" என்று தாய்மாமனை கொண்டாடும் பாடல் வரிகள் உங்களை புல் அரிக்க செய்திருக்கலாம். தென்மாவட்டங்களில் தாய்மானுக்கு என்று சபையில் பெரும் மரியாதை இருக்கு. தாய்க்கு நிகராக உரிமை கொண்டாடும் தாய்மாமன்தான் எல்லாமே. பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் சீனி தொட்டு வைக்கிறதுல இருந்து, கடைசியா போகும்போது பிறந்தல கொடி, கோடித்துணி போடுவரைக்கும் தாய்மாமன் உறவு முக்கியமாக இருப்பாதால் ஆண் தாயாக இருக்கும் தாய் மாமன்களுக்கு உசிலம்பட்டி மக்கள் தாய்மாமன்’s Day- வை கொண்டாடி உள்ளனர்.
இங்கே கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அண்ணன், தம்பி கூட கொடுத்தத திருப்பி கொடுக்க மாட்டாங்க ஆனா தாய்மாமன் எதையும் எதிர்பார்க்காம அள்ளிக் கொடுப்பாங்க என்ற நம்பிக்கை கிராமங்களில் உண்டு அதனால். தங்கள் வீட்டில் பெருச் செல்வமா நினைக்கும் நவ தானியங்களை தட்டில் வைத்து வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் என மங்கலகரமாக்கி பெருகச் செய்ய கொடுத்தார்கள். தாய்மானுக்கு தலையில் தலப்பாகை கட்டிவிட்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். மாமன் வயிறு நிறைய கிடாய்கறி சாப்பாடு கொடுத்து மனசையும், வயிறையும் நிறைய வைப்பார்கள். இப்படியான நிகழ்வு தாய்மாமன் 'Day' நடைபெற்றது.
உசிலம்பட்டி காரங்க கோவக்காரங்க, அதே சமயம் அம்புட்டு பாசக்காரங்க என்று பெருமை கொள்ளும் வேளையில் ஆடிப்பெருக்கன்று தாய்மானுக்கு விழா எடுத்துள்ளனர்.
இது குறித்து உசிலம்பட்டி மக்கள் நம்மிடம் பேசும்போது..."
பொதுவாவே உசிலம்பட்டில உச்சுக்கொட்டுர அளவுக்குதான் தாய்மாமன் சீர் செய்யூரது பாட்டேன், பூட்டே, சீயான் காலத்துல இருந்து இருக்குற பழக்கம். தங்கச் சங்கிலி போட்டாதான் தாய்மாமன்னு இல்ல. ரோசாப்பூ மாலை போட்டாலும் தாய்மாமன் தான். ஆனாலும் கடன ஒடன வாங்கியாச்சும் சீர் செஞ்சுபுடுவோம். அப்ப தான் சபை நிறையும். ஊர், உலகமே வீட்டுக்கு வந்தாலும் தாய்மாமன் வந்தாதான் சபைக்கு அழகு, மரியாதை வட்டார வழக்கில் பொளந்து கட்டினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து, புகை மண்டலமாக காட்சியளித்த வானம் !
குழந்தைக்கு மொட்டை அடிக்கிறது, காது குத்துரது வரைக்கும் தாய்மாமன் மடி தான் குழந்தைக்கு மெத்த. பிறந்த பிள்ளைய கட்டிக்குடுக்கும் போது தாய்மாமன் சம்மதம் சொன்னாதான் நிச்சயமே முடியும். அந்தளவுக்கு தாய்மாமன் உறவு வலுவானது. தாய்மாமா வீட்டு சீதனம் முக்கியமானது. அதுல வைக்கிற பயிர்கள விவசாயம் செஞ்சா உறவு நீடிக்கும்னு நம்பிக்கை இருக்கு. அந்த தாய்மாமனுக்கு ஆடிப் பெருக்கன்னைக்கு தலைப்பாகட்டி கிடா விருந்து கொடுத்து கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவோம். அதுல கிடைக்குற சந்தோம் கோடி காசு கொடுத்தாலும் கிடைக்காது" என்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!