நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தின் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்த காரணத்தினால் திரையரங்கம் சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் திரையரங்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ,தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே திரையரங்க வெளியீட்டிற்காக காத்திருந்த படங்களை ஒடிடியில் வெளியிடுவது என 2டி எண்டர்டைன்மெண்ட் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன்பிறப்பு ‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. மேலும் இந்த படங்கள் எந்த மாதங்களில் வெளியிடப்படும் என்ற தேதியும் அதன் ஃபஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.
உடன்பிறப்பு :
ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி நடிப்பில், இரா. சரவணன் இயக்கத்தில் தயாராகும் ‘உடன்பிறப்பு ‘ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளனர் படக்குழு. படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் :
TJ ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாக உள்ளது
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்:
இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணிபோஜன் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர்.படத்திற்கு அரிசில் மூர்த்தி கதை எழுதி இயக்கியுள்ளார். கிராமத்து பின்னணியை கொண்ட இந்த படமானது வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
ஓ மை டாக்:
அருண் விஜய் நடிப்பில் , சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகிவரும் காமெடி எண்டர்டைனரான இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியா உள்ளது.