இதய நோய்கள் இந்நாட்களில் எல்லோரையும் பயமுறுத்தும் அம்சமாக மாறி வருகின்றது. அதிகரித்து வரும் இதய நோய் சிக்கல்களுக்கு முக்கியமான காரணமாக வல்லுனர்கள் கூறுவது குறைந்து வரும் பழங்கள் மற்றும் காய்களின் பயன்பாடு தான்.
புதிதாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம், தினம் கிரான்பெர்ரி பழங்கள் உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சோதனையில், 45 ஆண்கள், ஒரு மாதத்திற்கு தினமும் 9 கிராம் கணக்கில் கிரான்பெர்ரி பவுடரை உட்கொண்டு வந்துள்ளனர். இது 110 கிராம் கிரான்பெர்ரி பழங்களுக்கு சமம். இவர்களது உடலில் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உறுதி சேர்க்கும் சிக்னல்கள் மேம்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகையால், கிரான்பெர்ரி பழங்கள் இதய நோய்களைத் தடுக்கும் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்வது குறைந்தது தான் இப்போது அதிகரித்திருக்கும் இதய நோய்களுக்கான காரணம். இவற்றில், பாலிபீனால்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்தாகும்.
இந்த சோதனையில், கிரான்பெர்ரி பவுடர் எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரங்களிலேயே ரத்த ஓட்டம் மேம்படுவது தெரிய வந்தது. ஒரு மாத சோதனையின் முடிவில், இந்த பயன்கள் தொடர்ச்சியாக வலுப்பட்டு வந்திருக்கிறது.
கிரான்பெர்ரி பழங்களைப் பல வகைகளில் நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலை உணவில், இந்த பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். பிரட், இனிப்பு தோசைகள், இந்த பழங்களை அடுப்பில் இட்டு சாஸ் ஆக்கி, அதை பல உணவுகளிலும் பயன்படுத்தலாம். விதவிதமான கேக்குகள், பைகள் தொடங்கி, இந்த பழங்களின் சாறையும் தினம் அருந்தலாம். சீஸ் கேக்குகளை இந்த கிரான்பெர்ரி பழ சாஸுடன் சாப்பிடுவது உலகம் எங்கும் மிகவும் விரும்பப்படும் உணவாக இருக்கிறது.
மேலும் இந்த லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்கவும்..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்