கேரட் விட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. கேரட்டில், பொரியல், அல்வா சாலட் உள்ளிட்டவைகளை தயாரிக்கலாம். பல்வேறு ஆரோக்கிய நலன்களை உள்ளடக்கியது என்பதால் கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கேரட் ஹல்வாவை நாம் எல்லோரும் சுவைத்திருப்போம், கேரட் பாயசத்தை சுவைத்ததுண்டா? வாங்க கேரட் பாயசம் எப்படி செய்வது என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 


கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)

வெள்ளம் – கால் கப்


தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய் பால் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – இரண்டு டீஸ்பூன்

முந்திரி – பத்து

திராட்சை – ஐந்து


செய்முறை


கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின்னர் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.  தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்காக மில்க் மெய்டு சேர்த்துக் கொள்ளலாம். தற்போது ருசியான தித்திக்கும் கேரட் பாயசம் தயார். இதன் மீது சிறிது துருவிய கேரட்டை சேர்த்து பரிமாறலாம். 


கேரட்டின் நன்மைகள் 


கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.  கேரட்டை சாப்பிடுவதால்,  இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல்,எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.


கேரட்டில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதில் கேரட் பெரும் பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க,


Shruthi Shanmugapriya Husband : அதிர்ச்சியில் ரசிகர்கள்.. ’நாதஸ்வரம்’ புகழ் ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்.. காரணம் என்ன?


Special Buses: வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு போறீங்களா..!? 200 சிறப்பு பேருந்துகள்.. அறிவித்த போக்குவரத்துக் கழகம்..