சரியான உறக்கம் கிடைக்காமல் இருப்பது இங்கு பலரது பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், சில உணவுப் பொருட்களை எடுத்துகொள்ளும்போது அது மெலட்டோனின் சுரப்பை அதிகப்படுத்தும். உறக்கத்திற்குக் காரணமாகும் இந்த சுரப்பு ஆரோக்கியமான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.


அமினோ அமிலம் ட்ரிப்டோஃபான் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்கள் இந்த மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும். விட்டமின் டி, மெக்னீசியம், சின்க் முதலிய சத்துகளும் உறக்கத்திற்கு உதவி புரியும். இந்த சத்துகள் எங்கு கிடைக்கும்?



எண்ணெய் நிறை, கொழுப்புள்ள மீன்கள்


மீன்கள் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருப்பவை. இது செரடோனின் சுரப்பிற்கு வழிவகுக்கும். மனநிலையை நிர்ணயிக்கும் ஹார்மோனான இது நல்ல உறக்கத்திற்குக் கூட்டிச் செல்லும்.


செர்ரி


செர்ரிப் பழநீரைப் பருகும்போது அது மேற்கூறிய சத்துகள் அனைத்தும் உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்கிறது. அது மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.


கிவி பழங்கள்


நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து கிவி பழங்களை உண்பது நல்ல உறக்கத்திற்கு இட்டுச் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


சிப்பிகள் (oysters)


இவற்றில் சின்க் சத்து அதிகம் கிடைக்கிறது. அது நல்ல உறக்கிதிற்கு உதவு செய்யும் என்று கூறப்படுகிறது.


பெரும்பாலும் மது அருந்துவது உறக்கத்திற்கு உதவி செய்யும் என்ற பரவலான எண்ணம் இருந்து வந்தாலும், மதுப் அழக்கம் ஆரோக்கியமான உறக்கத்திற்கு வழிவகுக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதற்குப் பதிலாக என்னென்ன பானங்களைப் பருகலாம்?


சூடான பால்


இது மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும்.


எலும்பு சூப்


அமினோ ஆசிட் கிளைசின் அதிகம் காணப்படும் எலும்பு சூப் தூக்கத்திற்கு உதவி புரியலாம் என்று கூறப்படுகிறது.


கேஃபின் எடுக்கப்பட்ட கிரீன் டீ


இதில் அமினோ அமிலம் இருப்பது நல்ல உறக்கத்திற்கு உதவி புரியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஹெர்பல் தேநீரும் பருகலாம் என்று கூறப்படுகிறது.  


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்