தேவையான பொருட்கள் 


1 அவகேடோ 


1 செவ்வாழை


1 கப் பால்


தேன் தேவையான அளவு


செய்முறை 


முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.( பழத்தை கையில் எடுத்து குலுக்கிப் பார்த்தால் அதனுள் விதை ஷேக் ஆக வேண்டும். அப்போது தான் அது பழம் என்று அர்த்தம்)


பின்னர் அதில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிப் போட்டு, அத்துடன் பால், சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்துக்கொள்ளலாம். சுவை நன்றாக இருக்கும்.


பின்னர் ஒரு டம்ப்ளரில் ஊற்றி சிகிது நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக குடிக்க சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி தயார். 


நாம் நம் உணவில் தினந்தோறும் ஒரு பழத்தை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுவும் அவகேடா செவ்வாழை ஆகிய பழங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 


அவகேடாவின் நன்மைகள் 


அவகேடா பழம், குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம்  சரியாகும் என கூறப்படுகிறது. வெளிநாட்டில் சத்து பானமாகவும், நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணெய்க்கு  பதிலாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான, குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்யும் ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்பழத்தில் காணப்படும் ‘விட்டமின் கே’ இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு  பாதுகாப்பினை அளிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. 

 

செவ்வாழையின் நன்மைகள் 

 

வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.மலச்சிக்கலை சரி செய்வதில் செவ்வாழை முக்கிய பங்காற்றுகின்றது. 

 

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் படிக்க,


இந்திய சட்டங்களுக்கு இந்தியில் பெயரா? மொழி சர்வாதிகாரம் என கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்


Cauvery Water Issue: 'தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு': காவிரி மேலாண்மை கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு...!