ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 


போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 


இன்று அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி இரண்டு அரையிறுதிப் போட்டிகளுடன் ஐந்தாவது இடத்துக்கான போட்டியும் நடைபெறுகிறது. 5அவது இடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணியான சீன அணியை எதிர்கொண்டது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி  வெற்றி பெற்ற ஒரே போட்டி சீனாவுக்கு எதிரான லீக் போட்டிதான். அதேபோல் சீன அணி இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாமல் உள்ளது. 


இந்நிலையில் இரு அணிகளும் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கியது முதல் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் மட்டும் தான் காணப்பட்டது. அதாவது போட்டியின் 9வது நிமிடத்தில் ஒரு கோலும், 10வது நிமிடத்தில் ஒரு கோலும், 11வது நிமிடத்தில் ஒரு கோலும், 15வது நிமிடத்தில் ஒரு கோலும் என பாகிஸ்தான் அணி பட்டையைக் கிளப்பியது. முதல் சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.


முதல் சுற்றிலேயே 4 கோல்கள் அடித்த பாகிஸ்தான் மீது இரண்டாவது சுற்றில் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் சுதாரித்துக்கொண்ட சீன அணி பாகிஸ்தான் அணிக்கு சவால் அளிக்கும் வகையில் ஆடியது. குறிப்பாக பாகிஸ்தான் அணி வீரர்களைச் சுற்றியே சீன அணி வீரர்கள் இருந்தனர். இதனால் பாகிஸ்தான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.




மூன்றாவது சுற்று தொடக்கத்தில் சீன அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தியது. இதனால் அந்த அணிக்கு ஒரு கோலும் கிடைத்தது. சீன அணி கோல் அடித்ததும் பாகிஸ்தான் அணி நேரத்தை விணாக்குவதில் கவனம் செலுத்த துவங்கினர். இதனால் மூன்றாவது சுற்று உப்புசப்பில்லாமல் போனது. 


போட்டியின் 4வது சுற்றில் சீன அணி கோல் போட முயற்சி செய்தாலும், பாகிஸ்தான் அணி நேரத்தை வீணாக்குவதிலேயே கவனமாக இருந்தது. ஒரு வழியாக அதுவாக கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பாகிஸ்தான் அணி கோலாக மாற்ற. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தனது 6வது கோலை அடித்தது. போட்டியின் கடைசி மூன்று நிமிடங்களில் சீன அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தவற விட்டது.  இறுதிச் சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி 5-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது.